உலகில் மிகவும் ஆபத்தான கார்போஹைட்ரேட் இதுதான்.. மைதா, வெள்ளை அரிசி அல்ல.. நிபுணர் வார்னிங்..!

starch

இண்டஸ்ரியல் ஸ்டார்ச் (Industrial starch) என்பது பல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும் இது தற்போது முக்கிய சுகாதார ஆபத்து என எச்சரிக்கை எழுப்பப்படுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த சரும நிபுணர் டாக்டர் பூஜா ரெட்டி, இந்த பொருள் சுத்திகரிக்கப்பட்ட மாவு (refined flour) என்பதைக் காட்டிலும் அதிகமாக தீங்கு விளைவிப்பதாகவும், உடலில் அழற்சி (inflammation) ஏற்படுத்தவும், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரவும், வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை உயர்த்தவும் காரணமாக இருக்க முடியும் என்று எச்சரித்துள்ளார்.


மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘உலகில் மிக ஆபத்தான கார்போஹைட்ரேட் எது?’ என்ற தலைப்பில் இந்த இண்டஸ்ட்ரியல் மாவை எண் 1 ஆபத்தான கார்ப் எனச் சுட்டிக்காட்டினார். சர்க்கரை, மைதா அல்லது வெள்ளை அரிசியை விட இதன் தீங்கு அதிகம் என அவர் கூறினார். இது போலி ஸ்டார்ச் என்றும் அழைக்கப்படுகிறது.. இது தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிக அளவில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்று தெரிவித்துள்ளார்..

இந்தச் செயல்முறைகளில், அதிக அளவிலான செயற்கை பராமரிப்பு, மிகுந்த வெப்பத்தில் செயலாக்கம், பல்வேறு ரசாயனங்கள் சேர்த்தல் ஆகியவை இடம்பெறுவதால், இந்த மா உடலில் மிக எளிதில் செரிமானம் ஆகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீர் உயர்வு ஏற்படுகிறது, இது நீண்டகாலத்தில் பல உடல்நல பிரச்சனைகளுக்குக் காரணமாகும் என்று அவர் கூறினார்.

டாக்டர் பூஜா ரெட்டி மேலும் “உலகில் நம்பர் ஒன் மிக ஆபத்தான கார்போஹைட்ரேட் சர்க்கரையுமில்லை, மைதாவுமில்லை, வெள்ளை அரிசியுமில்லை. அது சர்க்கரைவிட மோசமாக செயல்படுகிறது. இது உடலில் அதிக அளவு முறிப்பு (inflammation), வயிற்றுப் பகுதியில் சோர்வு, அதிக கொழுப்பு சேர்தல், கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சினைகளை உருவாக்குகிறது. மேலும், இன்று 10 கோடி இந்தியர்களை பாதித்திருக்கும் டைப்–2 நீரிழிவு நோய் வரும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அந்த கார்போஹைட்ரேட் என்ன? அதுதான் ‘Industrial starch’.. நான் வீட்டில் செய்யப்படும் உருளைக்கிழங்கு அல்லது அரிசி மாவை பற்றி சொல்லவில்லை. தொழிற்சாலை மற்றும் ஆய்வுகூடங்களில் தயாரிக்கப்படும் போலியான மாவை பற்றி சொல்கிறேன்.

இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் எந்த ஊட்டச்சத்தும் இல்லாதது. இது உணவுப் பொருட்களை அதிகமாக காண்பிக்கவும், கெட்டியான அமைப்பை கொடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு மலிவான நிரப்புப் பொருள் மட்டுமே. எனவே பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் லேபிள்களை கவனமாகப் பார்க்க வேண்டும். இதில் கார்ன் ஸ்டார்ச் (cornstarc), மால்டோடெக்ஸ்ட்ரின் (maltodextrin ), மாற்றிய உணவு மாவு (modified food starch ) போன்ற பெயர்களில் இது மறைந்து இருக்கும்.

பிஸ்கட், சாஸ், ரெடி-டு-ஈட் கலவைகள் போன்ற பல தயாரிப்பு உணவுகளில் இவை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இவை டைப்–2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க, உடலில் முறிப்பு, கொழுப்பு சேர்தல் ஆகியவற்றை உருவாக்குகின்றன

“ஸ்டார்ச் என்பது அடிப்படையில் பல சர்க்கரை மூலக்கூறுகள் சங்கிலியாக இணைந்த ஒன்று. ஆனால் இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் கடுமையான சூடு, இரசாயனங்கள், அதிக செயலாக்கம் ஆகியவற்றை கடந்து உருவாகும். இதனால் அது உடலில் மிக வேகமாக உடையக்கூடியதாக மாறுகிறது. நீங்கள் இதை சாப்பிடும்போது, உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு உண்மையான சர்க்கரையை விடவும் அதிகமாக உயர்கிறது — நேரடியாக ஒரு கரண்டி சர்க்கரை சாப்பிடுவதைக் காட்டிலும் கூட அதிகமாக உயரும்..” என்று எச்சரித்துள்ளார்..

இண்டஸ்ட்ரியல் ஸ்டார்சை எப்படி தவிர்ப்பது?

டாக்டர் “இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்சின் நோக்கம் சுவை அல்லது ஊட்டச்சத்தை சேர்ப்பதல்ல. இது உணவுக்கு அளவை அதிகரிக்கவும், தடிப்பாக காட்டவும் பயன்படுத்தப்படும் மலிவான நிரப்பு பொருள் மட்டுமே. இதற்கு எந்த ஊட்டச்சத்தும் இல்லை. பிஸ்கட்டுகள், சாஸ்கள், சூப் பொடிகள், புரோட்டீன் பவுடர்கள். மசாலா ரெடி-டு-ஈட் மிக்ஸ்கள் என தினமும் நீங்கள் சாப்பிடும் பல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் மறைந்து இருக்கும்.. ‘ஆரோக்கியமானது’ என்று சொல்லப்படும் பல தயாரிப்பு உணவுகளிலும் கூட இருக்கலாம்.. எனவே லேபிள்களைச் சரியாகப் பாருங்கள். இந்த பெயர்களில் ஏதாவது இருந்தால், அந்தப் பொருளை வாங்காதீர்கள்..” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : தூங்கும் போது இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க.. இது இதயம், மூளைக்கு மிகவும் ஆபத்தானது!

RUPA

Next Post

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உங்கள் படைப்பாற்றலுக்கு ரூ.25,000 பரிசு.. மத்திய அரசின் லோகோ வடிவமைப்பு போட்டி!

Mon Nov 24 , 2025
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் வாய்ப்பை வழங்குகிறது. “உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்” என்ற தலைப்பில் ஒரு லோகோ வடிவமைப்புப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம், நுகர்வோரின் உரிமைகளை நினைவூட்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் தயாரிப்புகளை கவனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு லோகோவை உருவாக்குவதாகும். லோகோ மூன்று முக்கிய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்: “நுகர்வோரை மேம்படுத்துதல்”, […]
logo

You May Like