அடுத்த பிளான் இதுதான்!. ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு?. அதிபர் டிரம்ப் சூசக அறிவிப்பு!

iranian regime change trump 11zon

ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பேரழிவை சந்திக்கும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் தன்னிடமுள்ள யுரேனியத்தை அழிவுகரமான அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தாது, மின் உற்பத்தி போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளுடன் கடந்த 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கு பிரதிபலனாக ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விலக்கிக் கொண்டன. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் முறையாக பதவியேற்ற போது, கடந்த 2018ல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறினார். ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார்.

இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்தை தொடங்கியது. அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கியது. இதனால், 2வது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு டிரம்ப், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானை கட்டாயப்படுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையே 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படவில்லை. யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தவில்லை.

இதற்கிடையே, ஈரான் 90 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டியதாகவும், அடுத்த ஓரிரு மாதத்தில் அணுகுண்டை தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இந்த தகவலை அமெரிக்க உளவுத்துறை மறுத்த போதிலும், டிரம்ப் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார். இந்த சூழலில், ஈரான் அணு குண்டு தயாரித்தால் இஸ்ரேலை அழிக்க முயற்சிப்பதோடு உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறும் என குற்றம்சாட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 13ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தினார்.

இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அணுசக்தி மையங்கள் மீது குண்டுமழை பொழிந்தன. இதற்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையில் இஸ்ரேல் படைகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவியது. அதுமட்டுமின்றி, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், இது ஈரானுக்கு வழங்கப்பட்ட 2வது வாய்ப்பு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினார். ஆனால் ஈரான் யாரிடமும் சரணடையாது என அந்நாட்டின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி காமெனி மறுத்து விட்டார். இஸ்ரேல், ராணுவ பலம் மிக்க நாடு என்றாலும், ஈரானின் உயர்பாதுகாப்பு நிறைந்த அணுசக்தி மையங்களை முழுமையாக தகர்க்கக் கூடிய சக்தி படைத்தது அல்ல. ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் முக்கிய அணு மையங்களாக நடான்ஸ் மற்றும் போர்டோ உள்ளன.

இதில் நடான்ஸ் அணு சக்தி மையம் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதமடைந்த நடான்ஸ் அணு சக்தி மையத்தின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஈரான் தெரிவித்தது. இதே போல, யுரேனியம் தாதுக்களை யுரேனியம் ஹெக்சாப்ளூரைடு வாயுக்களாக மாற்றம் செய்யக் கூடிய இஸ்பஹான் அணு மையம் மீது இஸ்ரேல் 2 முறை தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவித்தது. ஆனாலும் மலைக்கு அடியில் பல அடி ஆழத்தில் கட்டப்பட்ட போர்டோ அணு மையத்தை இஸ்ரேலால் நெருங்க முடியவில்லை.

இந்த அணுசக்தி மையத்தை தாக்கக் கூடிய ஜிபியு-57 ரக பங்க்கர் பஸ்டர் வெடிகுண்டு உலகிலேயே அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இதனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இப்போரில் பங்கேற்பது குறித்து 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 19ம் தேதி கூறியிருந்தார். அதே சமயம், அடுத்த 2 நாளில் அமெரிக்கா களமிறங்கும் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.அதே போல, போரின் 10வது நாளான நேற்று அமெரிக்காவும் இணைந்தது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் ஈரானில் குண்டுமழை பொழிந்தது.

நேற்று அதிகாலை அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த பி2 ஸ்டெல்த் போர் விமானங்கள் 18 மணி நேரம் பயணித்து ஈரான் வான்பரப்பை அடைந்தன. எந்த ரேடாரிலும் எளிதில் சிக்காத இந்த விமானங்கள் ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் அணு மையங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்தன.

அதே சமயம், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள் 30 தோமாஹாக் ஏவுகணைகளை வீசி நடான்ஸ், இஸ்பஹான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் ஆகிய 3 அணு சக்தி மையங்கள் மீதான தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

தாக்குதலில் ஈடுபட்ட எங்களின் அனைத்து போர் விமானங்களும் ஈரான் வான் பரப்பில் இருந்து வெளியேறி விட்டன. முக்கிய தாக்குதல் தளமான போர்டோவில் முழுமையான வெடிகுண்டுகளும் வீசப்பட்டுள்ளன. எங்கள் விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. உலகில் யாராலும் செய்ய முடியாத காரியத்தை இன்று அமெரிக்கா செய்திருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், தற்போது, ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது உளவு அமைப்பு மூலம் ந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்றும் வரலாற்றில் அதற்கு பல சான்றுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் களத்தில் இறங்கிய அமெரிக்கா, நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், இப்போதைய ஈரான் அரசாங்கத்தால், ஈரானை சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை, ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சூசக அறிவிப்பு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Readmore: மழை, வெள்ளம் வந்தாலும் பார்க்க மாட்டோம்; நக்சல்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை!

KOKILA

Next Post

உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவாரு... திருமாவை மறைமுகமாக தாக்கிய அ.மலை...!

Mon Jun 23 , 2025
திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த […]
Annamalai 2025 1

You May Like