சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கின்றனர்.. மேலும் துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.. பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.. மேலும் சிவகார்த்திகேயன், சிவகுமார், மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “ மாண்புமிகு தமிழக முதல்வர், தெலங்கானா முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இந்த அரங்கத்தை அதிர வைக்கும் அனைவருக்கு எனது மனமார்ந்த நன்றி.. உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி.. இந்த மாதிரி நிகழ்ச்சியில் இது தான் முதன்முறை.. சினிமா, ஆடியோ வெளியீட்டு விழாக்களில் ஏதாவது நாம் பேசிவிடலாம்.. இங்க அப்படி பேச முடியாது.. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியம்.. நான் நிகழ்ச்சியையும், இந்த திட்டங்களை வாழ்த்த தான் வந்தேன்.. இவர்கள் கூறிய கதைகள் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது.. திரும்பப் போகும் போது இன்னும் வாழ்க்கையில் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.. இவர்கள் எப்படியாவது படித்து மேல வர வேண்டும் என்று கூறுவதை நான் பார்க்கிறேன்.. உலகில் உள்ள அனைத்து செல்வங்களை விடவும் கல்வி மேலான செல்வம்.. சாப்பாட்டுக்கு கஷ்டமாக இருந்தது, பஸ் வசதி இல்லை என்று தங்கள் வாழ்க்கை அனுபவங்களை கூறினர்.. ஆனால் நான் 3 வேளையும் சாப்பிட்டு தான் பள்ளிக்கு போனேன்.. நான் ஆட்டோவிலும், பேருந்திலும் பள்ளிக்கு போனேன். என் அப்பா நடந்து போனதால்.. என் அப்பா ஒரு டிகிரி வாங்கினார்.. என்னை 2 டிகிரி வாங்க வைத்தார். என் அக்கா 3 டிகிரி வாங்கினார்..
நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே இந்த துறை சினிமா துறை மிகவும் சவாலானது.. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைவதே அசாத்தியமான விஷயம்.. சினிமாவில் சவால் வரும் போதெல்லாம் எனக்கு இருக்கும் ஒரே தைரியம்.. எனக்கு 2 டிகிரி இருக்கு.. என்னால் எந்த வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தான்…
இந்த திட்டத்தினால் பயன்பெறும் அனைத்து மாணவர்கள் என் வாழ்த்துகள்.. அரசுக்கும் முதல்வருக்கும், அதிகாரிகள் அனைவருக்கும் என் நன்றி.. கடைசியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.. வாழ்க்கையில் ஜெயிக்கணுமா, சம்பாதிக்கணுமா, எல்லோரிடமும் மரியாதையாக இருக்கணுமா எல்லாவற்றுக்கு ஒரே தீர்வு நல்லா படிங்க.. மார்க்-க்காக கொஞ்சம் படிங்க.. வாழ்க்கைக்காக நிறைய படிங்க.. உங்கள் எல்லோராலயும் சாதிக்க முடியும்.. என்னாலயே முடியும் போது.. உங்களால் நிறைய முடியும்.. இந்த மாதிரியான திட்டங்கள் இன்னும் பெரிய சாதனையாளர்களை உருவாக்கும்.. இதனால் இவர்கள் பயனடைவது மட்டுமல்ல.. அடுத்து வரும் தலைமுறையினருக்கும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்..” என்று தெரிவித்தார்..



