நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார்.
டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் முகுல் தேவ். நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். 1996ஆம் ஆண்டு ’மும்கின்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் விஜய் பாண்டே என்ற வேடத்தில் முகுல் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர், அவர் ’ஏக் சே பத் கர் ஏக்’ என்ற பாலிவுட் கவுண்டவுன் நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றினார். தொடர்ந்து, ’ஃபியர் ஃபேக்டர்’ என்ற இந்தியாவின் முதல் சீசனையும் தொகுத்து வழங்கினார். அவர், ’தஸ்தக்’ என்ற படத்தில் ஏசிபி ரோஹித் மல்ஹோத்ராவாக நடித்தார். இந்தப் படத்தில் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் அறிமுகமானார். முகுல் தேவ் கடைசியாக ’அந்த் தி எண்ட்’ என்ற இந்தி படத்தில் நடித்தார்.
இந்தி தவிர்த்து பஞ்சாபி, ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தன் தம்பி முகுல் தேவ் இறந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் அண்ணன் ராகுல் தேவ். அவருக்கு சியா தேவ் என்கிற மகள் இருக்கிறார். இவர்களின் மறைவு செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார். முகுல் தேவின் தவறான உணவு பழக்கத்தாலேயே உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறிய அவர், ஐசியு-வில் இருந்த 8 நாட்கள் கொடுமையான காலம் என்றார். கடைசி 5 நாள்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்தியதாகவும், உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை அவர் இழந்துவிட்டதாகவும் வேதனையுடன் கூறினார்.
Read more: IRCTC கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது ? தட்கல் டிக்கெட்டை எப்படி விரைவாக புக் செய்வது ?