291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும் உலகின் மிகவும் மெதுவான ரயில் பற்றி தெரியுமா?
நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றியமைத்த பல முயற்சிகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிகளை தங்கள் இடங்களுக்கு கொண்டு செல்கின்றன. சில ரயில்கள் காற்றைப் போல வேகமாக ஓடுகின்றன, இன்னும் சில ரயில்கள் மிகவும் மெதுவாக இயங்குகின்றன. இந்த ரயில்கள் சில கிலோமீட்டர்களைக் கடக்க கூட மணிநேரம் ஆகும். அந்த வகையில் இந்தியாவின் மெதுவான ரயில் அல்ல.. உலகின் மெதுவான ரயில் பயணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த ரயில் 291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும்.. இது தான் உலகின் மிகவும் மெதுவான ரயில் என்று கருதப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, ரயில் எந்த நிறுத்தமும் இல்லாமல் தொடர்ந்து ஓடுகிறது. இந்த ரயிலின் பெயர் கிளேசியர் எக்ஸ்பிரஸ் (Glacier Express).
இந்த ரயில் ரோன் பனிப்பாறை, உயரமான மற்றும் ஆபத்தான ஓபரால்ப் பாஸ், வளைந்து செல்லும் லேண்ட்வாசர் வயடக்ட் மற்றும் “சுவிட்சர்லாந்தின் கிராண்ட் கேன்யன்” என்றும் அழைக்கப்படும் ரைன் ஜார்ஜ் போன்ற உலகின் மிக அழகான நிலப்பரப்புகள் வழியாக செல்கிறது.
கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில முக்கிய அம்சங்கள் இதோ:
இந்தப் பாதையில் உள்ள ரயில் உயர்ந்த மலைகளைக் கடந்து செல்கிறது.
பனி மற்றும் அமைதியான மலை கிராமங்கள் வழியாக நகரும்போது, இந்த ரயில் பயணம் சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் “உலகின் மிக மெதுவான எக்ஸ்பிரஸ் ரயில்” என்று அழைக்கப்படுகிறது..
கரடுமுரடான மலைகள் வழியாக பயணிக்கும் இந்த ரயில் மணிக்கு 24 மைல் வேகத்தில் ஓடுகிறது.
மெதுவான வேகம் காரணமாக, பயணிகள் பல்வேறு நிலப்பரப்புகளையும், பல்வேறு உயரங்களையும் அனுபவிக்க போதுமான நேரத்தைப் பெறுகிறார்கள்.
இந்த கிளேசியர் எக்ஸ்பிரஸ் 291 பாலங்கள் மற்றும் 91 சுரங்கப்பாதைகளைக் கடந்து 291 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கிறது.
இந்த சிலிர்ப்பூட்டும் ரயில் பயணம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டிலிருந்து செயிண்ட் மோரிட்ஸ் வரை ஓடும் இந்த ரயில், பிரமிக்க வைக்கும் ஆல்ப்ஸ் மலைகள் வழியாக செல்கிறது.
பிரபலமான லேண்ட்வாசர் வயடக்ட் மற்றும் ஓபரால்ப் பாஸ் ஆகியவை இந்த அற்புதமான பயணத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதிகளாகும்.
கடல் மட்டத்திலிருந்து 2,033 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓபரால்ப் பாஸ் இந்த பாதையில் மிக உயரமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 2-ம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை மிரள வைத்த பெண்.. மறக்கப்பட்ட முஸ்லிம் இளவரசியின் கதை!