AI-யிடம் மருத்துவ ஆலோசனை கேட்டால் இந்த நிலைமை தான் உங்களுக்கும் நடக்கும்..!! மருத்துவர்கள் பகிரங்க எச்சரிக்கை..!!

Artificial Intelligence 2025

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை (AI Chatbot) நம்பியிருக்கும் நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார ஆலோசனைகளுக்கு இவற்றை தவிர்ப்பது அவசியம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செயலிழப்பு :

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 30 வயதுப் பெண் ஒருவர், தனக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை இழந்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு சுமார் 7 ஆண்டுகள் டயாலிசிஸ் செய்து வந்த அந்தப் பெண், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய ஆண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டை குறித்து சாட்ஜிபிடி-யிடம் (ChatGPT) கேட்டுள்ளார்.

‘கெரடின் (Creatinine) அளவு போதுமானதாக இருக்கும்பட்சத்தில் ஆண்டிபயாடிக் மருந்துகளை தொடர தேவையில்லை’ என்று சாட்ஜிபிடி கூறிய ஆலோசனையை நம்பி அவர் மருந்துகளை நிறுத்தியுள்ளார். இதன் விளைவாக, அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உப்பு தவிர்த்ததால் உடல்நலப் பாதிப்பு :

இதேபோல, நியூயார்க்கில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில், 60 வயது முதியவர் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென உடல் எடை குறைதல் மற்றும் சோடியம் அளவு குறைதல் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டார். இதற்கு காரணம், அவர் சாட்ஜிபிடி-யில் பார்த்து, அதன்படி கடுமையான உணவுக் கட்டுப்பாடு (Diet Plan) ஒன்றைப் பின்பற்றியதுதான். சாட்ஜிபிடி அவருக்கு முழுவதுமாக உப்பை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்த தவறான டயட் ஆலோசனையைப் பின்பற்றிய அவர், உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் அறிவுரை :

இந்த சம்பவங்களின் பின்னணியில், மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். “சாட்ஜிபிடி மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் வெறும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றை ஒருபோதும் உண்மையான மருத்துவ ஆலோசனைகளாகவோ அல்லது சிகிச்சைகளாகவோ அணுக கூடாது” என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சாட்பாட்கள் மருத்துவர்களை விட சிறந்தது என்று பொதுமக்கள் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் பதில்கள், ஒரு தனிநபரின் மருத்துவ வரலாறு, உடல்நிலையின் சிக்கலான நிலை மற்றும் பிற மருந்துகளின் தாக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளும் திறன் அற்றவை. எனவே, பொதுமக்கள் இது குறித்து மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Read More : உண்மையிலேயே வயாகரா மாத்திரை எதற்கு தெரியுமா..? இதன் பக்கவிளைவுகள் தெரிந்தால் தொடவே மாட்டீங்க..!!

CHELLA

Next Post

பாகிஸ்தான் ISI தொடர்புடைய கையெறி குண்டு தாக்குதல் சதி முறியடிப்பு..10 பேர் கைது; பஞ்சாப் போலீஸ் அதிரடி..!

Fri Nov 14 , 2025
பஞ்சாப் போலீசார் பாகிஸ்தான் உளவுத்துறை Inter-Services Intelligence (ISI) ஆதரவில் செயல்பட்டதாக கூறப்படும் கையெறி குண்டு தாக்குதல் சதி குழுவை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதி தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஹாண்ட்லர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாகவும், பஞ்சாபில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடத்தில் கைக்குண்டு வீசி பதட்டத்தை ஏற்படுத்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் காவல் துறை இயக்குநர் (DGP) கௌரவ் யாதவ் […]
pakistan

You May Like