“இதுக்காக தான் ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்..” லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

cm stalin foriegn trip

தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்..

அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது..


2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.. இதன் மூலம் சுமார் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டன.. தமிழ்நாடு வளர்ந்துள்ளதா என கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விவரங்களே பதிலாக உள்ளது.. எனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் தமிழ்நாடு, அமைதி மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கக்கூடிய மாநிலமாக உயர்ந்திருப்பதால் இங்கு முதலீடு செய்ய முன் வருகின்றனர்..

இதன் தொடர்ச்சியாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன்.. அங்கு மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து உங்கள் செய்திக்குறிப்பாக தெரிவிக்கப்படும்.. நாட்டிலேயே வேகமாக வரும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க நான் செல்கிறேன்.. செப்டம்பர் 4-ம் தேதி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறந்து வைக்க உள்ளேன்.. எனது கைகளால் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..

Read More : #Breaking : 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.77,000ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

RUPA

Next Post

விஜய்யின் அரசியல் வருகை.. திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியா? ஓரே வரியில் முதல்வர் சொன்ன ‘நச்’ பதில்!

Sat Aug 30 , 2025
விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா? முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் […]
TVk vijay stalin

You May Like