“இதனால் தான் தாய்க் கழகமான திமுகவில் இணைந்தேன்..” வைத்திலிங்கம் பேட்டி..!

vaithilingam dmk

டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. ஒரத்தநாடு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.. 2021 தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தான். அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை வந்த போது ஓபிஎஸ் பக்கம் இருந்தார்.. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராகவே வலம் வந்தார்.


இந்த சூழலில் வைத்திலிங்கம் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்..

இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்…

திமுகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ தமிழ்நாட்டில் அனைவரும் போற்றும் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கீறது.. எல்லோரின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.. நான் அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்..

திமுக தலைமையிடம் எந்த டிமாண்டையும் நான் வைக்கவில்லை.. திமுகவில் இருந்து வந்தது தான் அதிமுகம்.. திமுக என்பது தாய்க் கழகம்.. அரசியலுக்காக மக்கள் சேவை செய்ய தொடங்கப்பட்டது தான் திமுக.. அதனால் திமுகவில் இணைந்துள்ளேன். இன்னும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து திமுகவுக்கு நிறைய பேர் வர உள்ளனர்.. வரும் 26-ம் தேதி இணைப்பு விழா இருக்கிறது.

அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரமாக செயல்படுகிறது.. ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.. தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கு இன்று திமுக தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.. அதனால் தான் திமுகவில் இணைந்தேன்.

Read More : Flash : மீண்டும் பாஜக கூட்டணியில் இணையும் அமமுக.. டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

RUPA

Next Post

உஷார்..! ஒரே ஒரு கிளிக்கில் உங்கள் மொத்த பணமும் பறிபோகலாம்.. KYC மோசடியில் சிக்குவதை எப்படி தவிர்ப்பது..?

Wed Jan 21 , 2026
வங்கிச் சேவைகள் உட்பட பல பணிகளை எங்கிருந்தும் செய்யக்கூடிய வகையில் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சி அடைந்துள்ளன, ஆனால் மோசடிக்காரர்களும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.டிஜிட்டல் மோசடிகள் தொடங்கிய நாளிலிருந்தே KYC மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்ப்பது எப்படி என்பதை மக்கள் அறிவது மிகவும் முக்கியம். அவர்கள் வங்கிகள் உட்பட அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி, அவற்றின் இணைப்புகளை மக்களுக்கு அனுப்புகிறார்கள். […]
kyc account 1

You May Like