கரூர் கொடுந்துயரம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு விஜய் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.. தவெக மீது எந்த தவறும் இல்லை, ஆளுங்கட்சி மீது தான் தவறு என்ற கோணத்தில் அவர் பேசி உள்ளார்.. அதில் பேசிய அவர் இதுபோன்ற வலியை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.. அப்படி ஒரு வலி.. கரூரில் பிரச்சாரம் செய்தது தவிர நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.. சி.எம். சார்.. உங்களுக்கு ஏதாவது பழிவாங்கணும் என்று இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன்.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. தொண்டர்கள் மீது மீது கை வைக்காதீர்கள்.. நண்பர்களே தோழர்கள். நமது அரசியல் பயணம் இன்னும் ஸ்ட்ராங்காக மாறும்” என்று தெரிவித்தார்..
கரூரில் இருந்து விஜய் ஏன் திரும்பி வந்தார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில் விஜய் அதற்கும் பதிலளித்துள்ளார்.. நானும் மனிதன் தானே.. அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கும் போது, எப்படி என்னால் அந்த ஊரை விட்டு திரும்ப வர முடியும்.. நான் திரும்ப அங்கு சென்றால் அங்கு வேறு பதற்றமான சூழல் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் நான் அங்கு செல்வதை தவிர்த்தேன்.. உயிர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.. கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.. எங்களுடைய வலியை நிலையை புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சி தலைவர்கள் நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்.