தவெக தலைவர் இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. புத்தூர் பகுதியில் உரையாற்றிய அவர் திமுக அரசு எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.. மேலும் நாகை மக்களின் பிரச்சனைகளையும் அவர் எடுத்துக் கூறினார்.. மேலும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்..
அப்போது பேசிய அவர் “ போன வாரமே நான் பெரம்பலூருக்கு சென்றிருக்க வேண்டியது.. ஆனால் போக முடியவில்லை.. இந்த நேரத்தில் நான் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. இந்த டூர் பிளான் போட்ட பின்னர், சனிக்கிழமை மட்டும் ஏன் வருகிறார் என்ற பிரச்சனை தொடங்கியது.. உங்களை எல்லாம் நான் வந்து பார்க்கும் போது உங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் இருக்கக் கூடாது.. முக்கியமாக உங்கள் வேலைக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. என்ற ஒரே காரணத்திற்காக தான் வீக் எண்டாக பார்த்து இந்த பயணத்தை திட்டமிட்டோம்.. விடுமுறை நாட்கள், ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பது தான் எண்ணமே… அரசியலில் சிலருக்கு நாம் ஓய்வும் கொடுக்க வேண்டும் இல்லையா? அதனால் தான் ஓய்வு நாட்களாக பார்த்து தேர்வு செய்தோம்..” என்று தெரிவித்தார்..



