முந்தைய காலத்தில் “மாரடைப்பு” என்பது வயதானவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது முற்றிலுமாக மாறிவிட்டன. இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும், சில நேரங்களில் மரணமும் கூட நிகழ்வது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களே உணவுப் பழக்க வழக்கங்கள் தான்.
நம் முன்னோர்கள் இயற்கையின் வளத்துடன் வலிமையாக இருந்தார்கள். சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நாட்டு உணவுகள் என அவர்களின் வாழ்க்கை முறையே ஒரு மருத்துவமாக இருந்தது. ஆனால், இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் நகர வாழ்க்கையில் சிக்கி ஃபாஸ்ட்புட், பிரட், பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட சுவையூட்டிய உணவுகளையே முக்கியமாக சாப்பிடுகின்றனர்.
இதன் விளைவாக உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மாரடைப்புக்கு இந்த உணவுகள் முக்கிய காரணமாக இருக்கிறது. பிஸ்கட், வெண்ணெய் பிரட், கேக், சாக்லேட் கூகீஸ், கேரமல் சாஸ் ஆகியவற்றில் உப்பு, சர்க்கரை இரண்டுமே சேர்த்து இருக்கும். இதில் உள்ள அதிக சோடியம் (உப்பு சார்ந்த துணிச்சத்துகள்) நம் உடலின் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். அது நாளடைவில் இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நிகழ்வுகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், சிப்ஸ், சீஸ், மயோனெய்ஸ், ரெடிமேட் சாஸ் போன்ற தயாரிப்பு உணவுகளும் இதே ஆபத்தை உருவாக்குகின்றன. இவை உடம்பில் கெட்ட கொழுப்பைக் கூட அதிகரிக்கின்றன. அதனுடன் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது.
உணவுதான் மருந்து, தவறான உணவுதான் நோய் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தினசரி உணவில் இனிப்பு, உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் அளவை கட்டுப்படுத்துவதுடன், இயற்கை உணவுகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும். மேலும், நாள் தோறும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி முக்கியம். மாரடைப்பு என்பது பரவும் நோய் அல்ல, விழிப்புணர்வு மற்றும் உணவுப் பழக்கங்கள் சரியாக இருந்தால், அது உங்களை நெருங்கவே நெருங்காது.
Read More : உங்களுக்கு யாராவது செய்வினை வெச்சிருக்காங்களா..? இந்த அறிகுறிகள் இருந்தால் கன்ஃபார்ம்..!!



