ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் டூத் பேஸ்ட். நம் பற்களை சுத்தம் செய்ய இதை தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால், இதன் பயன்பாடு அதைவிட அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியுமா..? டூத் பேஸ்ட் என்பது வெறும் பற்களை சுத்தம் செய்யும் பொருள் அல்ல. வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் சுத்தம் செய்யலாம்.
புதிது போல ஜொலிக்கும் ஷூ : வழக்கமாக நாம் அணியும் ஷூவுக்கு மேல் தூசி, அழுக்கு சேர்ந்து கறையாக மாறுகிறது. அதைத் துடைத்தும், கழுவியும் போகவில்லை என்றால், ஒரு ஸ்மார்ட் ஹேக் இதோ. சிறிதளவு டூத் பேஸ்ட்டை அந்த அழுக்கு மேலே தடவுங்கள். சிறிது ஈரமுள்ள ஃப்ரஷ் அல்லது துணியால் மெதுவாக தேய்க்கவும். பிறகு சுத்தமான துணியால் துடைத்தால் போதும். ஷூ புதிது போல் ஜொலிக்கும்.
பாத்ரூம் டைல்ஸ் : பாத்ரூம் டைல்ஸில் ஜாயின்ட் இடங்களில் அடிக்கடி கறைகள் படிகின்றன. டைல்ஸ் மீது சிறிது டூத் பேஸ்ட் தடவவும். தண்ணீர் சில துளிகள் சேர்த்து 5 நிமிடம் விட்டுவிட்டு, பின் துணியால் தேய்த்தால், பளபளப்பான டைல்ஸ் உங்களுக்கு கிடைக்கும்.
கண்ணாடி : கண்ணாடி மேல் படிந்த சாயம், கைரேகைகள், தூசி போன்றவை எளிதாக அகற்ற சிறிது டூத் பேஸ்ட் தடவி, மென்மையான துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும்.
வெள்ளி பொருட்கள் : நம் வீட்டு வெள்ளி பாத்திரங்களில் சில நேரம் கருப்பு படிந்து, மங்கிய தோற்றம் ஏற்படும். அப்போது, வெள்ளிப் பொருள் மீது சிறிதளவு டூத் பேஸ்ட் தடவி, மென்மையாகத் தேய்த்து, பின் தண்ணீரில் கழுவ வேண்டும். இப்போது பழைய வெள்ளி, புதியதாக ஜொலிக்கும்.
வாகன ஹெட் லைட் : வாகனத்தின் ஹெட் லைட்டில் தூசி மற்றும் பசுமை படிந்திருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் டூத் பேஸ்ட் கலந்து மென்மையான துணியில் அந்த கலவையை லேசாக தேய்க்கவும். இப்போது, ஹெட் லைட் முற்றிலும் தெளிவாக இருக்கும்.
குறிப்பாக, மேற்பரப்பின் தன்மைக்கு ஏற்ப, முதலில் சிறிய பகுதியில் சோதித்து பார்க்க வேண்டும். சில வகை மரப்பொருட்கள், கண்ணாடிகள், அல்லது நிறமுள்ள பொருட்களுக்கு பேஸ்ட் பொருந்தாமல் இருக்கலாம். துணிகள் மென்மையாக இருக்க வேண்டும். அதிக அழுத்தமாக தேய்க்க வேண்டாம்.
Read More : குறைந்த முதலீட்டில் மாட்டுப் பண்ணை..!! மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம்..!! சாதித்து காட்டிய இளைஞர்..!!