இன்னும் 36 மாதங்கள் தான்.. பூமியில் இல்ல.. விண்வெளியில் இது நடக்கும்.. AI பற்றி எலான் மஸ்க் கணிப்பு..!

elon musk 11zon

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மேலும் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) நிறுவுவதற்கான மிகக் குறைந்த செலவு இடம் பூமி அல்ல, விண்வெளியே என்றும், இது அடுத்த 36 மாதங்களுக்குள் அல்லது 30 மாதங்களுக்குள் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.


சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், விண்வெளியில் அமைக்கப்படும் ஆர்பிட்டல் டேட்டா சென்டர்கள், பூமியில் மின்சக்தி உற்பத்தியை பெரிதாக்குவதில் உள்ள சவால்கள், அமெரிக்காவில் மனித வடிவ ரோபோக்களை (Humanoids) பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கான தேவைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பேசினார்.

இந்த உரையாடலில், “பூமியில் AI டேட்டா சென்டர்களை அமைப்பதை விட, விண்வெளியில் அமைப்பது எளிது.. விண்வெளியில் சூரிய மின்பலகைகள் (solar panels) பூமியை விட ஐந்து மடங்கு அதிக செயல்திறன் தருகின்றன. அதோடு, பேட்டரிகளும் தேவையில்லை” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் “ விண்வெளியில் பகல்–இரவு சுழற்சி, பருவ மாற்றம், மேகங்கள் அல்லது வளிமண்டலம் எதுவும் இல்லை.. வளிமண்டலம் மட்டுமே சுமார் 30 சதவீத மின்சக்தி இழப்புக்கு காரணமாகிறது.. இதனால், ஒரே ஒரு சூரிய மின்பலகை கூட விண்வெளியில் இருந்தால், பூமியை விட ஐந்து மடங்கு அதிக மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும். இரவு நேரத்திற்கு மின்சக்தி சேமிக்க பேட்டரிகள் வைக்க வேண்டிய செலவும் தவிர்க்கப்படுகிறது. ஆகவே, விண்வெளியில் AI டேட்டா செண்டர்களை அமைப்பதற்கு உண்மையில் மிகக் குறைந்த செலவாகும்..” என்று தெரிவித்தார்..

AI பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் GPU கருவிகளின் நம்பகத்தன்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், பலரும் நினைப்பதைப் போல ஹார்ட்வேர் பழுதுகள் பெரிய பிரச்சினையல்ல என்று கூறினார். எதிர்கால AI கட்டமைப்புகள் பூமியைத் தாண்டி விண்வெளியில் உருவாகலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

மேலும் “அது எந்த அளவுக்கு புதிதாக வந்த GPU என்பதையே பொறுத்தது” என்று கூறிய மஸ்க், ஆரம்ப கட்ட சோதனை மற்றும் பிழைதிருத்த (debugging) நிலையைத் தாண்டிய பின், Nvidia, Tesla அல்லது TPU, Trainium போன்ற சிப்புகளை உருவாக்கும் பிற நிறுவனங்களின் GPUகள் நீண்ட காலம் நம்பகமாக செயல்படுகின்றன என்று விளக்கினார்.

“ஒருமுறை அந்த ஆரம்ப பிழைதிருத்த கட்டத்தை கடந்துவிட்டால், அவை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு பின் மிகவும் நம்பகமாக இயங்கும். அதனால், தொடர்ந்து பராமரிப்பு செய்வது பெரிய சவாலாக இருக்காது” என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Read More : 18% வரி, 500 பில்லியன் டாலர் முதலீடு..! இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்.. முக்கிய அம்சங்கள் இதோ..!

RUPA

Next Post

SBI வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி.. பிப்ரவரி 15 முதல் புதிய விதிகள் அமல்..! இனி கட்டணங்கள் அதிகமாக இருக்கும்..!

Sat Feb 7 , 2026
வங்கித் துறையின் ஜாம்பவானான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தனது உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை ஆன்லைனில் செய்யப்பட்ட சில வகை பரிவர்த்தனைகளுக்கான இலவச வசதியை ரத்து செய்து, புதிய கட்டணங்களை இறுதி செய்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். […]
SBI money

You May Like