“மாற்றம் என்று சொன்னவர்கள் மறைந்து போனார்கள்.. ஆனா திமுக மட்டும்..” விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுக பதிலடி!

TVk vijay stalin

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது..


இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக உழைப்பவர்கள் நாம்.. உங்களை போன்ற உண்மையான உடன்பிறப்புகள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது.. உங்களுக்கு தலைமை தொண்டனாக இருப்பது நான் பெற்ற பெரும் பேறு..

திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலில் நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.. தொடர்ந்து திமுக அமைந்தது என்று புது வரலாறு படைக்க வேண்டும்.. வரலாறு படைக்கலாமா? தயாராகிவிட்டீர்களா? அதற்காக தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முன்னெடுத்து, தமிழ்நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை திமுகவில் இணைத்துள்ளோம்..

தமிழ்நாட்டை காக்கும் காவல் அரண் திமுக மட்டும் தான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக் கொள்கை.. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிரா இந்த இயக்கம் போராடி வருகிறது..

அந்த கொள்கையின் அரசியல் முகம் பாஜக.. ஒன்றியத்தில் இருக்கும் பாஜக அரசுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.. 2 நாட்களுக்கு முன்பு கூட எதிர்கட்சி தலைவர் பேசிய போது, கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்ற உண்மையை பேசியிருக்கிறார்.. அதனால் தான் நமக்கு தொடர்ந்து இவ்வளவு குடைச்சலை கொடுத்து வருகிறார்கள்.. நாம் முடங்கிவிடுவோம் என்று நினைத்தனர்.. திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா?

இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது என்ற வரலாற்றை உருவாக்கியது நாம். நமக்கு 74 வருட வரலாறு இருக்கு.. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட எல்லாக் கட்சிகளுமே திமுகவை எதிர்ப்போம், ஒழிப்போம் என்று சொன்னார்கள்.. இப்பவும் சிலர் திமுகவுக்கு நாங்க தான் மாற்று என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்? என்ன மாற்றப் போகின்றனர்.. நமது கொள்கை தான் நமது பலம்.. மாற்றம் என்று சொன்னவர்கள் மாறினார்கள்.. மறைந்து போனார்கள்.. ஆனால் திமுக மட்டும் மாறவில்லை.. தமிழ்நாட்டு மக்களின் மனதில் இருந்து என்றைக்கு மறையவில்லை.. இது தான் தமிழ்நாடு பாலிடிக்ஸ்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

“எப்பவுமே தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நோ எண்ட்ரி தான்.. இன்னுமா எங்களை பத்தி தெரியல..” முப்பெரும் விழாவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Wed Sep 17 , 2025
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எவ்வளவோ நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். ஆனா நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநில அரசு செய்யாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் முதல் மாநிலமாக முன்னேறி இருக்கிறோம்.. இதனால் தான் நமது திராவிட […]
mk stalin

You May Like