Breaking : ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்..! முதியோர் உதவித்தொகை ரூ.2,000..! 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட இபிஎஸ்..!

edappadi k palaniswami

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த அரசியல் யுத்தத்தில் பெரிய கூட்டணிகளை தாண்டி, குறிப்பிட்ட சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சிறிய அமைப்புகள் மற்றும் சமுதாயப் பேரவைகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகளுமே மும்முரமாக களம் இறங்கியுள்ளன.


அந்த வகையில் அதிமுக ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தது..

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை இபிஎஸ் அறிவித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் “ முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.. படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்..மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.. அதற்கான செலவை அரசே ஏற்கும். சிறுபான்மை வகுப்பினர் சுய தொழில் தொடங்குவதற்கு, வட்டியில்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

“கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்தும் விஜய் வெளியே வரல.. அவர் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும்..” இபிஎஸ் சாடல்..!

Wed Feb 4 , 2026
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டார்..  இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.. படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.. மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்யப்படும்.. அதற்கான […]
1332588

You May Like