கணவர் கண்முன்னே காட்டுக்குள் வைத்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! தூத்துக்குடியில் துயரம்..!!

Rape 2025 2 1

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்ற பல தனியார் நிறுவனங்களில், அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்குச் சேர்ந்தனர். திருநெல்வேலியில் வசிக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் (27) என்பவர், கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக இருந்ததாலும் அந்த தம்பதியினர் வேலையில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலத்திற்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, அரசர்குளத்தில் இருந்து ஆட்டோவில் திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்ட முகமது ஹுசைன், “நீங்கள் வேலையில் இருந்து விலகக் கூடாது; நீங்கள் தொடர்ந்து வேலை செய்வீர்கள் என்று கூறி நான் பணம் வாங்கிவிட்டேன்” என்று மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய முகமது ஹுசைன், பைக்கில் இரண்டு இளம் சிறார்களை உடன் அழைத்துக் கொண்டு சிவந்திபட்டி பகுதியில் ஆட்டோவை வழிமறிக்க காத்திருந்தார். ஆட்டோ அங்குச் சென்றதும், தம்பதியினர் கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக ஆட்டோ டிரைவரிடம் பொய்ச் சொல்லி, இருவரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, அந்தப் பெண்ணின் கணவரை முகமது ஹுசைன் உள்ளிட்ட 3 பேரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். பிறகு, அவருடைய கண்முன்னே, அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பல மணி நேரத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட தம்பதியினரை காட்டுப் பகுதியில் விட்டுவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 நபர்களையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். கணவர் கண் முன்னே அசாம் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழக மக்களுக்கு ஜாக்பாட் செய்தி..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!

CHELLA

Next Post

புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்.. SIR-க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

Tue Dec 16 , 2025
பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தியது.. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு […]
pudhucherry sir

You May Like