கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர் முகமது (43). இவர் வீட்டில் இருந்தபடியே இடியாப்பம் தயாரித்து, கரூர் நகரப் பகுதி மற்றும் காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த முன்தினம் பள்ளி விடுமுறை தினம் என்பதால், பக்கீர் முகமது அதே பகுதியைச் சேர்ந்த 12, 10, மற்றும் 7 வயதுடைய மூன்று சிறுமிகளைத் தனது வீட்டிற்கு ஒரே நேரத்தில் அழைத்துள்ளார். அங்கு அந்த 3 சிறுமிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உடனடியாகத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பக்கீர் முகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



