கமல்ஹாசனின் தக்லைஃப் படம் 4 நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவான படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்றார் போல, படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆனால் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் காம்போ ரசிகர்களை ஈர்க்கத் தவறிவிட்டது. ஆம். படம் வெளியான பிறகு தக் லைஃப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பலரும் தக் லஃபி படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்றும் ஏமாற்றத்தையே அளித்ததாகவும் விமர்சித்து வருகின்றனர். மேலும் தக் லைஃப் படத்தை ட்ரோல் செய்தும் மீம்ஸ்களை வெளியிட்டும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த பிரம்மாண்டமான படம், சமீபத்திய காலங்களில் மிகவும் விமர்சிக்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாக இந்த படம் மாறி உள்ளது..
ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்து வருகிறது. இந்த படம் வசூலை குவிக்க போராடி வருகிறது. அதன்படி தக்லைஃப் படம் 4 நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
படம் வெளியான முதல் நாளில் ரூ. 15.50 கோடி வசூல் செய்த நிலையில், 2 ஆம் நாளில் தக் லைஃப் 7.15 கோடி ரூபாய் வசூலித்தது. 3 ஆம் நாளில், 7.75 கோடி வசூல் செய்ததால் லேசான ஏற்றம் ஏற்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வசூலில் ஏற்றத்தை காண்பதற்குப் பதிலாக, சரிவை எதிர்கொண்டது. அதன் படி தக்லைஃப் படம், 4-வது நாளில் வெறும் 6.12 கோடியை மட்டுமே வசூலித்தது. ஒட்டுமொத்தமாக, இந்தப் படம் தொடக்க வார இறுதியில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 36.52 கோடி ரூபாய் நிகர வசூலை ஈட்டியது. வரிகளையும் சேர்த்து, இது மொத்தமாக 43.09 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
தக் லைஃப் படத்தின் நாள் வாரியான வசூல்:
முதல் நாள் – 15.50 கோடி
2வது நாள் – 7.15 கோடி
3வது நாள் – 7.75 கோடி
4வது நாள் – 6.12 கோடி
மொத்தம் – 36.52 கோடி
கோவிட்க்குப் பிறகு கமல்ஹாசனின் மிகக் குறைந்த தொடக்க வார இறுதி!
கோவிட்க்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத்த மிகக் குறைந்த தொடக்க வார இறுதியை இந்தப் பிரம்மாண்டமான படம் பதிவு செய்தது. தக்லைஃப் முதல் வார இறுதியில், விக்ரம் மற்றும் இந்தியன் 2 படங்களை விட மிகவும் குறைவாக வசூல் செய்துள்ளது. இந்தியன் 2 போன்ற மிகப்பெரிய தோல்வி படங்களுடன் ஒப்பிடும்போது, கமலின் சமீபத்திய வெளியீடு 38.25% குறைவாகவே வசூலித்தது.
கோவிட்-க்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த படங்களின் முதல் வார இறுதி வசூல்
விக்ரம் – 94.65 கோடி
இந்தியன் 2 – 59.15 கோடி
தக் லைஃப் – 36.52 கோடி
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தக்லைஃப் படம் 100 கோடி வசூலை கடக்குமா என்பதே சந்தேகம் தான். மேலும் 2025-ன் மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக மாறிவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.. இந்த படம் மொத்தம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை..
Read More : முத்த மழை பாடலுக்கு கோரஸ் பாடிய இந்த பொண்ண கவனிச்சீங்களா..?