ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு பிரதோஷங்கள் வரும். அதிலும், வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. பிரதோஷ நேரமான மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, நாம் செய்யும் வழிபாடுகளுக்கும், உச்சரிக்கும் மந்திரங்களுக்கும் அபரிமிதமான சக்தி உண்டு என முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு, நம் பிறவித் தோஷங்களைப் போக்க உதவும்.
வியாழன் பிரதோஷத்தின் சிறப்பு :
வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபட்டால், முழு சுபகிரகமான குரு பகவானின் அருளையும் சேர்த்து பெறலாம் என்பது நம்பிக்கை. குறிப்பாக, ஜாதகத்தில் குருவின் கோட்சாரம் சரியில்லாதவர்களும், குரு திசை நடப்பவர்களும், குருவின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும்.
எப்படி வழிபட வேண்டும்..?
வியாழன் பிரதோஷ நாளில் மாலை நேரத்தில் சிவ ஆலயத்திற்கு சென்று, நந்தி பகவான், சிவபெருமான், அம்பிகை மற்றும் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். கோவிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில், மஞ்சள் நிறப் பூக்களை வைத்து 27 வெள்ளை கொண்டைக் கடலைகளை நிவேதனம் செய்து வழிபட்டால் குரு பகவானின் அருளால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற அனைத்துத் தடைகளும் நீங்கி, வாழ்வில் வளம் பெருகும்.
Read More : வந்தாச்சு அறிவிப்பு..!! “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 10,000 வீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!