காலை உணவை தவிர்க்காதீர்கள்!
ஒரு நாளை ஆரம்பிக்கும் போது முழு உற்சாகமாக உருவாக்கிக்கொள்ள காலை உணவு மிக முக்கியம். காலை உணவை உட்கொள்ளுவதினால் உணவு இடைவேளைகளில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதிலுருந்து உங்கள தவிர்த்துக்கொள்ளலாம்.
சர்க்கரையை தவிருங்கள் :
உங்கள் டீ காபிகளில் போடும் சர்க்கரையை தவிருங்கள் அல்லது குறைத்துக்கொள்ள்ளுங்கள். இது உங்களின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது .
டைரி எழுதுங்க:
தினமும் நீங்கள் சந்தித்த, ஏற்பட்ட நிகழ்வுகளை எழுதுங்கள். நாளை முடிக்கவேண்டிய, செயல்படுத்த வேண்டியவற்றை எழுதுங்கள். உங்கள் சுய முன்னேற்றத்துக்கும் மன அமைதிக்கும்
உறுதுணையாக இருக்கும்.
வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளுங்கள்:
முடிந்த அளவு வீட்டில் சமைத்த உணவை உட்க்கொள்ளுவதால் உடல் ஆரோக்கியமாகவும் குடும்பத்துடன் நேரத்தை செலவளித்தது போலவும் இருக்கும்.
காய்கறிகள் உட்கொள்ளவும்:
தினமும் காய்கறிகள் கீரைகள் உண்ணுவது உடல் ஆரோக்யத்திற்கான சிறந்த முதலீடாகும். தினமும் காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ளுவதால் என்றும் இளமையாக இருக்கலாம்.
உடற்பயிற்சி:
தினமும் உடற் பயிற்சி செய்வது உடலுக்கு நாம் செய்யும் மிக முக்கிய கடமையாகும். நீண்ட ஆயுள் பெறுவதற்கு இது ஒரு எளிய முறை.
நேர்மறை எண்ணங்கள் :
மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் நிரம்பி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் மனம் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்யும் பயிற்சியாகும்.