2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு ஏராளானோர் அங்கு கூடியிருந்ததால் சில பெண்கள் மயக்கம் அடைந்தனர்.. கூட்ட நெரிசல், போதிய தண்ணீர் வசதி இல்லாததால் சில பெண்கள் மயக்கம் அடைந்தனர்.. மேலும் விஜய்யின் பிரச்சார வாகனம் செல்ல முடியாத அளவுக்கு தொண்டர்கள் அவரின் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.. இதனால் அவரின் வாகனம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது..
முன்னதாக விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.. ஆனால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கார் பைக் மூலம் பின் தொடர்ந்து செல்கின்றனர்.. விமான நிலையத்திற்கு தொண்டர்கள் யாரும் வர வேண்டாம், விஜய் பேசும் இடத்திற்கு வந்தால் போதும் என்று அக்கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது.. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஏராளாமான தொண்டர்கள் விமான நிலையம் முன்பு கூடியிருந்தனர்.. மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.. இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது..