திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயா தேவி என்பவரது இடத்தில் 42 தகரக் கொட்டைகள் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.
வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வாடகைக்கு தங்கி உள்ளனர். இந்த சூழலில் அந்த பகுதியில் நடந்த சிலிண்டர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சிலிண்டர் விபத்தில் வீடுகளில் இருந்த தொழிலாளர்களின் உடமைகளும் முழுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.. எனினும் இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..
தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..