60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய ராட்சத பாம்பு பற்றி தெரியுமா?
மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு, பூமியில் டைனோசர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இருந்தன. ஆனால் டைனோசர்கள் அழிந்து போன பின்பு ஒரு புதிய ராட்சத உயிரினம் தோன்றியது. அது பறக்கவோ அல்லது கர்ஜிக்கவோ இல்லை.. ஆனால் அது நம்பமுடியாத வலிமையுடன் இருந்தது.. அது எந்த உயிரினம் தெரியுமா? டைட்டனோபோவா என்ற ராட்சத பாம்பு தான் அது.. இந்த பாம்பு தான் பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பு.
இந்த பாம்பு, சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி இப்போது இருப்பதை விட மிகவும் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்த நேரத்தில் வாழ்ந்தது. பாலூட்டிகள் பரவத் தொடங்கியிருந்தபோது, டைட்டனோபோவா ஏற்கனவே தென் அமெரிக்காவின் வெப்பமண்டல சதுப்பு நிலங்களில் முதன்மையான வேட்டையாடும் உயிரினமாக மாறிவிட்டது.
40 அடிக்கு மேல் நீளமாகவும், ஒரு டன்னுக்கும் அதிகமான எடையுடனும் இந்த பாம்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்போ, அல்லது பின்போ இவ்வளவு பெரிய பாம்பு இருந்ததில்லை.. இந்த ராட்சத அளவு காரணமாக மட்டும் டைட்டனோபோவா சுவாரஸ்யமாக இல்லை. டைனோசர்கள் மறைந்த பிறகு டைட்டோனோபோவாவின் வாழ்க்கை எவ்வாறு உருவானது? பூமியின் காலநிலை புதிய உயிரினங்களை வடிவமைப்பதில் எவ்வாறு பங்கு வகித்தது என்பது பற்றிய முக்கியமான தடயங்களை நமக்கு வழங்குகிறது.
டைட்டனோபோவா ஏன் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது?
டைட்டனோபோவாவின் படிமங்கள் தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலம்பியாவில் உள்ள செரெஜான் நிலக்கரிச் சுரங்கங்களில் பண்டைய பாறை அடுக்குகளை ஆய்வு செய்தபோது, விஞ்ஞானிகள் பெரிய எலும்புகளைக் கண்டறிந்தனர். மேலும் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை ஒரு பெரிய பாம்பைச் சேர்ந்தவை என்பது தெளிவாகியது. அது வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய பாம்பு மட்டுமல்ல. பல டைட்டனோபோவாக்கள் மிகப்பெரிய அளவை இருந்திருக்கலாம் என்பதை புதைபடிவங்கள் காட்டின.
டைட்டனோபோவா எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ள, அதை இன்றைய மிகப்பெரிய பாம்புடன் ஒப்பிடுவோம். தற்போது உயிருடன் இருக்கும் மிகப்பெரிய பாம்பான அனகோண்டா 29 அடி வரை வளரக்கூடியது. ஆனால் டைட்டனோபோவா சுமார் 43 – 50 அடி நீளம் வரை இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே தான் டைட்டானோபோவா என்பது இதுவரை பூமியில் வாழ்ந்த பாம்புகளில் மிகப்பெரிய பாம்பு என்று கருதப்படுகிறது..
டைட்டனோபோவா இவ்வளவு பெரியதாக வளர முக்கிய காரணங்களில் ஒன்று பூமியின் பண்டைய காலநிலை ஆகும்.. சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பூமி இன்று இருப்பதை விட மிகவும் வெப்பமாக இருந்தது. பாம்புகள் போன்ற குளிர் இரத்தம் கொண்ட விலங்குகளுக்கு, இந்த கூடுதல் வெப்பம் அவற்றின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, அவை பெரிதாக வளர அதிக சக்தியை அளித்தது.
டைட்டனோபோவாவின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம், அது பசுமையான தாவரங்கள், ஆமைகள், பெரிய மீன்கள் மற்றும் முதலை போன்ற உயிரினங்களால் நிறைந்த வெப்பமான, சதுப்பு நிலப் பகுதியில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. இந்த சூடான, செழிப்பான சூழல் டைட்டனோபோவா பாம்பு மிகப் பெரியதாக வளர தேவையான அனைத்தையும் வழங்கியது.
தண்ணீரில் வாழ்க்கை
மிகப்பெரிய அளவு காரணமாக, டைட்டனோபோவா பெரும்பாலான நேரங்களில் தண்ணீரில் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இன்றைய அனகோண்டாக்களைப் போலவே, ஆறுகள் அல்லது சதுப்பு நிலங்களில் வாழ்வதும் வறண்ட நிலத்தை விட அவற்றின் கனமான உடல்களை எளிதாக ஆதரிக்க உதவியிருக்கும். இந்த நீர்வாழ் வாழ்விடமும் அதன் வேட்டையாடும் முறையுடன் ஒத்துப்போகிறது. டைட்டனோபோவா ஒரு கட்டுப் பாம்பு என்று புதைபடிவங்கள் காட்டுகின்றன. அது தனது இரையை கொல்லை விஷத்தைப் பயன்படுத்தவில்லை, மாறாக அதன் சக்திவாய்ந்த தசைகளைப் பயன்படுத்தி அதன் இரையை கொன்றது.. சதுப்பு நிலச் சூழல் பெரிய மீன்கள், முதலைகள் போன்ற பல உயிரினங்கள் இந்த பாம்பின் இரையாக இருந்தன..
எப்படி அழிந்தது?
காலநிலை மாற்றம் தொடர்பான காரணிகளின் கலவையால் டைட்டனோபோவா அழிந்து போயிருக்கலாம். கூடுதலாக, மழைக்காடுகளின் வாழ்விடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் உயிரினங்களிலிருந்து அதிகரித்த போட்டி ஆகியவை ஒரு பங்கைக் கொண்டிருந்தன.
காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை டைட்டனோபோவா அழிவின் முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன. அதே நேரம் எரிமலை செயல்பாடு மற்றும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பிற காரணிகளும் சுற்றுச்சூழலை சீர்குலைத்து டைட்டனோபோவா அழிவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : ரூ.250 கோடி.. மிகவும் விலை உயர்ந்த இந்த காரின் உரிமையாளர் யார் ? அம்பானி, அதானி இல்ல..