நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.. இந்தப் படத்தை பிரபல நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதலில் தனது படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் ஜேசன் தடுமாறி வந்தார்.. கவின் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது.. இறுதியில் நடிகர் சுந்தீப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார்.. இந்த படம் தற்காலிகமாக “JS 01” என்று அழைக்கப்பட்டு வந்தது.. தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்..
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது… அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்திற்கு சிக்மா (Sigma) என்று பெயரிடப்பட்டுள்ளது.. தங்கக்கட்டிகள், பணக்கட்டு, யானைத் தந்தங்களின் மேல் சந்தீப் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.. மேலும் தேடல் தொடங்குகிறது என்ற கேப்ஷனையும் லைகா நிறுவனம் பதிவிட்டுள்ளது.. இது கடத்தல் தொடர்பான கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது..
ஜேசன் சஞ்சய் கனடா மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைக்கதை எழுத்து (Screenwriting) தொடர்பான பயிற்சிகளை முடித்துள்ளார். தனது கல்வியை முடித்தபின், தமிழ் சினிமாவில் தன் தந்தையின் பாதையில் நடிகராக எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : Flash : நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிந்ததால் பரபரப்பு!



