தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 32
பணியிட விவரம் மற்றும் சம்பளம்
பல் மருத்துவ அறுவை சிகிச்சையாளர் (1) – ரூ.34,000
யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர் (1) – ரூ.60,000
யோகா (1) – ரூ.28.000 சம்பளம்
சிகிச்சை உதவியாளர் (1) – ரூ.20.000 சம்பளம்
மருந்தாளர் (1) – ரு.15,000 சம்பளம்
பல் மருத்துவ டெக்னீஷியன் (1) – ரூ.12,600
தூய்மை செய்பவர் (4) – ரூ.8,500
மருத்துவமனை ஊழியர் (22) – ரூ.8,500
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 59 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும். பல் மருத்துவ அறுவை சிகிச்சையாளர் பதவிக்கு 35 வயதிற்குள்ளும், பல் மருத்துவ டெக்னீஷியன் மற்றும் தூய்மை செய்பவர் பதவிகளுக்கு 20 முதல் 35 வயதிற்குள்ளும், மருத்துவமனை ஊழியர் பதவிக்கு 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* பல் மருத்துவ அறுவை சிகிச்சையாளர் பதவிக்கு பிடிஎஸ் பட்டப்படிப்புடன் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை.
* யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர் பதவிக்கு அதற்கான முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* யோகா நிபுணர் பதவிக்கு BNYS முடித்திருக்க வேண்டும்.
சிகிச்சை உதவியாளர் பதவிக்கு அதற்கான டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* மருந்தாளர் பதவிக்கு பார்மசி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* பல் மருத்துவ டெக்னீஷியன் பதவிக்கு டென்டல் டெக்னாலஜி-யில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* தூய்மை செய்பவர் மற்றும் மருத்துவமனை ஊழியர் பதவிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருப்பது அவசியமாகும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருபுவோர் https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2026 ஆகும்.
முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் – 18.
Read more: உலகில் ஒரு பள்ளி கூட இல்லாத நாடு பற்றி தெரியுமா? அதற்கான காரணம் இதோ!



