TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்.. செம சான்ஸ்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

job 7

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநகம், வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்று அறிவித்துள்ளது.


திட்டத்தின் பின்னணி: மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும்,
அவர்களுக்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தவும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், உலக வங்கியின் நிதி உதவியுடன் “உரிமைகள் திட்டம்” கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது.

6 ஆண்டுகளுக்கான திட்டம், ரூ.1773.87 கோடி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது மறுவாழ்வு சேவைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை தங்கள் இருப்பிடம் அருகே பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்கிறது.

பணியிட விவரம்:

பிளாக் ஒருங்கிணைப்பாளர் – 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் – 94
உளவியலாளர் / ஆலோசகர் – 94
சிறப்புக் கல்வியாளர் – 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் – 94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் – 94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) – 188
அலுவலக உதவியாளர் (SDC) – 94

சம்பள விவரம்:

பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவி – ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவி – ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவி – ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவி – ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவி – ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவி – ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவி – ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவி – ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவி – ரூ.12,000

ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இணையதள அறிவிப்பில்  தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. 

எப்படி விண்ணப்பிப்பது? இதற்கான விண்ணப்பங்களை tnrightsjobs.tnmhr.com இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14-10-2025 ஆகும்.

Read more: விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பில் குறைபாடு..? விரைவில் Z பிரிவு பாதுகாப்பு..? – விளக்கம் கேட்கும் உள்துறை..

English Summary

TN Rights Project Job.. 1,096 Vacancies.. Good Announcement.. Apply Now..!!

Next Post

லடாக்கின் 'ஆரிய குழந்தைகளின்' ரகசிய உலகம்: இதுவரை கேள்விப்படாத கர்ப்ப சுற்றுலா! உண்மையா அல்லது கட்டுக்கதையா?

Thu Oct 2 , 2025
‘கர்ப்ப சுற்றுலா’ என்று சொன்னால் தங்கள் குழந்தைகளுக்கு தானியங்கி உரிமைகளையும், பெரும்பாலும் சிறந்த எதிர்காலத்தையும் வழங்கும் நாடுகளுக்குப் பயணம் செய்யும் கர்ப்பிணித் தாய்மார்கள் தான் பலரின் நினைவுக்கும் வரும். பாஸ்போர்ட், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன்களைப் பெறுவதற்காக பல தம்பதிகள் மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை இது. ஆனால் நீங்கள் லடாக்கின் ஆரிய பள்ளத்தாக்கில் இந்தக் கருத்து முற்றிலும் தலைகீழாக மாறி உள்ளது.. அங்கு கர்ப்ப சுற்றுலா பற்றிய […]
brokpa community who inhabit a cluster of himalayan villages claims that they are the direct aryan 010712842 16x9 0 1

You May Like