TNPL 2025!. அமித் சாத்விக், துஷார் ரஹேஜா சரவெடி!. சாம்பியன் பட்டம் வென்றது திருப்பூர் அணி!. திண்டுக்கல் டிராகன்ஸ் ஏமாற்றம்!.

TNPL tiruppur champions 11zon

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் முடிவுக்கு வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, முதல் குவாலிபையர் போட்டியில் சேப்பாக்கை வீழ்த்திய திருப்பூர் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து எலிமினேட்டர் சுற்றில் திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு சென்றது. அதில் சேப்பாக்கை வீழ்த்திய திண்டுக்கல் அணி 2வது அணியாக பைனலுக்கு நுழைந்தது.


இதனை தொடர்ந்து நேற்று இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ்வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்த போது புவனேஷ்வர் ‘வேகத்தில்’ சாத்விக் (65ன்) வெளியேறினார்.அபாரமாக ஆடிய ரஹேஜா (77) கைகொடுத்தார். திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (1), பாபா இந்திரஜித் (9) ஏமாற்றினர். அதுல் வித்கர் (24) ஆறுதல் தந்தார். புவனேஷ்வர் (12) ‘ரன்-அவுட்’ ஆனார். திண்டுக்கல் அணி 14.4 ஓவரில் 102 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இதன்மூலம் 118 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Readmore: காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை.. மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு..!!

KOKILA

Next Post

வரலாறு படைத்தது கில் படை!. 58 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!.

Mon Jul 7 , 2025
பர்மிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தை இந்திய அணி தோற்கடித்துள்ளது. ஆகாஷின் அபார பந்துவீச்சால், 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி . இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆகாஷ் […]
india won 2nd test 11zon

You May Like