சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,560க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.. சில நாட்கள் மட்டும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.73,840க்கு விற்பனையானது..
கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.. அதில் ஓரிரு நாட்கள் மட்டும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. அந்த வகையில் இந்த வாரத்தில் கடந்த 3 நாட்களும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1320 குறைந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,070க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனையாகிறது.
ஆனால் இன்று வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.