மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.840 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

heirloom jewellery symbol of tradition and love 1 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,320க்கு விற்பனையாகிறது..

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

ஜூன் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.2000 குறைந்தது.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.105 உயர்ந்து ரூ.9,120க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : ஆஹா!. இனி அனைத்து கிராமங்களிலும் அதிவேக இண்டர்நெட்!. இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை அறிமுகம்!. வெளியான அப்டேட்!

English Summary

Gold prices in Chennai rise by Rs. 840 per sovereign, selling at Rs. 71,320.

RUPA

Next Post

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க தடை..!! இன்று முதல் அமல்..

Tue Jul 1 , 2025
Ban on supplying petrol and diesel to vehicles older than 15 years..!!
petrol pumps 1 1

You May Like