விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!. பூஜையில் இடம்பெற வேண்டிய 21 பழங்கள் என்னென்ன?

21 fruit ganesh chaturthi 11zon

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. முழு முதற்கடவுளாக இந்து சமயத்தினரால் போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 இலைகள், 21 பூக்கள், 21 பழங்கள் வைத்து நன்மைகள் பெருகி, கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். அந்த 21 பழங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மாம்பழம்
பலாப்பழம்
வாழைப்பழம்
இலந்தை பழம்
பிரப்பம் பழம்
நாவல் பழம்
சாத்துக்குடி
கொய்யா பழம்
மாதுளை
அன்னாசிப்பழம்
சப்போட்டா
சீதாப்பழம்
விளாம்பழம்
திராட்சை
பேரிக்காய்
கரும்பு
அத்திப்பழம்
சோளம்
ஆரஞ்சு
பேரிச்சம்பழம்
உலர் பழங்கள் – பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை.

இவைகளை வைத்து வணங்கினால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். இவை அனைத்தும் கட்டாயம் வைத்து வணங்க வேண்டும் என்று அவசியமில்லை. பெரும்பாலானோர் விளாம்பழம், ஆப்பிள், திராட்சை என தங்களால் இயன்றவற்றை வைத்து வணங்குவார்கள்.

தங்கள் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்களால் இயன்றவற்றை வைத்து விநாயகரை வணங்கினாலே போதுமானது. ஏனென்றால் அவர் எளிமையின் கடவுளாக கருதப்படுகிறார்.

Readmore: ‘1000 கால்கள், 5000 ஆபாச மெசேஜ்கள்’: மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை துன்புறுத்திய கொடூர சைக்கோ..! பகீர் சம்பவம்!

KOKILA

Next Post

கேட்கும் வரங்களை அருளும் தையல்நாயகி அம்மன் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

Wed Aug 27 , 2025
Is there a history of the goddess Thayalnayaki Amman who grants boons upon request?
temple 1 1

You May Like