சிவ பெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் மகா சிவராத்திரி விரதம்.. ஒவ்வொரு மாதமும் சிவ ராத்திரி விரதம் வந்தாலும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரதமாக கருதப்படுகிறது.. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, அதாவது இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இன்றூ மாலை தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி அதிகாலை வரை, தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து, விரதமிருந்தால் சிவபெருமானின் அருளை பெற முடியும் என்பது ஐதீகம்..
சிவராத்திரி விரதத்தின் பலன்கள் என்னென்ன தெரியும்.. சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு கதை மூலம் சிவராத்திரி விரதத்தின் பலன்களைச் சொன்னதாகக் லிங்க புராணம் கூறுகிறது. இதைக் கேட்பவர்கள் அல்லது படிப்பவர்கள் மகா சிவராத்திரியின் பலன்களை மிகவும் சிறப்பான முறையில் பெறுவார்கள் என்று சிவபெருமான் வாக்குறுதி அளித்ததாக லிங்க புராணம் கூறுகிறது.
மகாசிவராத்திரி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவது பிரச்சனைகளயும் பாவங்களையும் நீக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று, ருத்ராபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் சிவனை வழிபட்டு, ஓம் நம சிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் புனிதமானது.
அன்றைய தினம், அதிகாலையில் எழுந்து, குளித்து, வெள்ளை ஆடைகளை அணிந்து, சிவனை வழிபடுவதன் மூலம், ஒருவர் சிவனின் அருளைப் பெறலாம் மற்றும் நிதி மற்றும் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
சிவராத்திரி அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
விரதம் – சிவராத்திரி காலை முதல் மறுநாள் காலை வரை விரதம் இருப்பது பாவங்களை நீக்குகிறது மற்றும் மன அமைதியை அளிக்கிறது. சிவ பெருமானை நினைத்து சிவ நாமத்தை உச்சரித்து இரவு முழுவதும் விழித்திருப்பது கர்ம பந்தங்களை நீக்குகிறது.
அபிஷேகம், பூஜை – பால், தேன், தயிர், நெய் மற்றும் சர்க்கரை (பஞ்சாமிர்தம்) ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அவரை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் உள்ள பல சிரமங்கள் நீங்கும். மந்திர ஜபம் – ஓம் நமஷ் சிவாய என்ற மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமோ அல்லது ருத்ராஷ்டகம் சொல்வதன் மூலமோ, ராகு, கேது மற்றும் சனி ஆகியோரின் தோஷங்கள் முற்றிலுமாக நீங்கும்.
இன்றைய தினம் இறைச்சி, வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்கள் மற்றும் மதுவைத் தவிர்க்க வேண்டும். மஹா மிருத்யுஞ்சய மந்திரம் – ஓம் த்ரயம்பகம் யஜாமஹே என்ற மந்திரத்தை உச்சரிப்பது அகால மரண பயத்தை நீக்குகிறது.
மகா சிவராத்திரி விரதம் இருபப்வர்கள் பிப்ரவரி 16-ம் தேதி காலை 6.42 முதல் பகல் 3.10 வரை நேரத்தில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.. இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் 3-ம் கால பூஜையில் மட்டுமாவது விழித்திருந்து சிவனை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.. இது அன்னை பராசக்தி, ஈசனை வழிபட்டு வரங்கள் பெற்ற காலம் என்று நம்பப்படுகிறது.. அதனால் தான் இந்த சமயத்தில் நாமும் சிவனை மனதார வேண்டினால் நமக்கும் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..
ஓம் நம சிவாய மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்வது மிகவும் சிறப்பு.. மஹா சிவராத்திரி நாளில் ஏழைகளுக்கும் துறவிகளுக்கும் தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், அவர்கள் சிவபெருமானின் ஆசிகளைப் பெறுவார்கள், அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பார்கள், வாழ்க்கையில் அமைதியையும் செழிப்பையும் அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.



