நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவின் பிறந்த நாள் இன்று.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இன்று தனது 57 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. சூர்யா, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா படிப்பை முடித்தார். ஹீரோவாக ஆசைப்பட்டவர், நிதி நெருக்கடியால் உதவி இயக்குனரானார். பாக்யராஜ், பாரதிராஜா, வசந்த் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றிய எஸ்.ஜே. சூர்யாவுக்கு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1999-ல் அஜித்தை வைத்து ‘வாலி’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.

குறைந்த சம்பளத்தில் ‘வாலி’யில் பணியாற்றிய எஸ்.ஜே. சூர்யா, ‘குஷி’ படத்திற்கு லட்சங்களில் சம்பளம் பெற்றார். தொடர்ந்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யா, ‘நியூ’ படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தார். ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால், சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். ‘இறைவி’ படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

ஸ்பைடர், மெர்சல், ராயன், கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் சொந்த ஊரில் சொத்துகள், சொகுசு கார்கள் வைத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு 150 கோடி எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்காக ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. 

Read more: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல..!! – அமித்ஷாவை மறைமுகமாக சாடிய EPS

English Summary

Today is the birthday of acting legend S.J. Surya.. is his property worth this much?

Next Post

20 ஆண்டுகளாக கோமா.. சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' காலமானார்..!!

Sun Jul 20 , 2025
Saudi Arabia’s ‘Sleeping Prince’ dies after 20 years in coma
sleeping prince

You May Like