இன்று சர்வதேச பால் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாலுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அதை கொண்டாடவேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.
பால் என்று ஒற்றைவரியில் இதன் சத்தையும் பயனையும் அடக்கிவிடமுடியாது. அன்றாட உணவில் மிகப்பெரும் பங்கு பாலுக்கு உண்டு. பிறந்த குழந்தை தாய்ப்பால் கிடைக்காமல் இருக்கும் போது அதற்கு இணையாக தருவது பசும்பால் தான். குழந்தையின் உயிர்காப்பானாக தாய்ப்பாலுக்கு மாற்றாக தொடங்கும் பாலில் தான் எத்தனை அபரிமிதமான சத்துக்கள் இருக்கிறது.
பசும்பால் மட்டும் அல்லாமல் ஆட்டுப்பால், எருமைபால்,கழுதைபால், குதிரைபால் ஏன் ஒட்டகப்பால் வரை விலங்குகளின் பாலை பயன்படுத்திவருகிறோம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக எளிதில் செரிமானமாக கூடிய பாலாக மருத்துவ உலகம் சொல்வதும் பசும்பாலை தான்.
பாலை பாலாக மட்டும் அல்லாமல் அதிலிருந்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பால் பொருள்களும் அதிக அளவு பயன்படுத்துகிறோம். பாலே சத்து மிக்கவைதான். பாலிலிருந்து மேலும் சத்து தரக்கூடியது மோர், தயிர். வெண்ணெய், நெய் என்று பலவும் அன்றாட உணவில் தவிர்க்காமல் இடம்பிடிக்கிறது.
தினம் காலையில் எழுந்ததும் காஃபியும், டீயும் இல்லாமல் நாள் ஒடாது என்று சொல்வதுண்டு. அந்த தயாரிப்பில் முக்கிய இடமே பாலுக்கு தான் உண்டு. பசும்பால் பாக்கெட் பால்களை காட்டிலும் தண்ணீரோடு தான் இருக்கும். பசும்பாலில் 80 சதவீதம் அளவு தண்ணீராகத்தான் இருக்கும். பாலில் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்தது.தாய்ப்பாலுக்கு இணையான ஃபோலிக் அமிலங்களும் தயமின், பொட்டாசியம் இதில் இருப்பதால் தான் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் அடுத்த இடத்தில் இருக்கிறது.
பாலில் குறைந்த அளவு புரதம் இருந்தாலும் இது கால்சியம் மற்றும் லாக்டோஸ் அதிகம் கொண்டிருக்கிறது. பால் உடலுக்குள் லாக்டிக் அமிலமாக மாறு உடல் புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை உறிஞ்சு கொள்ள ஊக்குவிக்கிறது. குழந்தை முதல் தினசரி ஒரு டம்ளர் பால் குடிப்பவர்கள் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் என்னும் பிரச்சனையை அதிகம் சந்திக்கமாட்டார்கள்.
ஒரு டம்ளர் பாலில் இருக்கும் சத்து: 100 கிராம் அளவுள்ள ஒரு கப் அளவு பாலில் 120.மி.கிராம் அளவு கால்சியம், 4.1 கிராம் அளவு கொழுப்பு, 4. 4 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 3.2கிராம் அளவு புரதம், 67 கலோரி அளவு இருக்கிறது.
5 வயதுக்கு மேற்பட்டகுழந்தைகளுக்கு தினமும் 400 கிராம் வரை அளவு பால் கொடுக்கலாம். 40 வயது வரை இருப்பவர்களும் இந்த அளவில் தினமும் குடிப்பது நல்லது. அந்த வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு குறைந்த அளவுள்ள பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிக்கவேண்டும். வயதானவர்கள் நிச்சயம் கொழுப்பு நீக்கப்பட்ட பால் தான் குடிக்க வேண்டும்.
Readmore: வரும் 9-ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை…! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!