இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இந்த வருடம் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஜனவரி 4ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

அதே சமயம் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 21ஆம் தேதி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

பார்சல் பெட்டியில் வெட்டப்பட்ட சிறுவனின் தலை..! 

Tue Jan 3 , 2023
அர்ஜென்டினாவின் மான்டே கிராண்டே நகரில் உள்ள புவனேஸ்  ஏர்ஸ் நகரில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் பெட்டியை ஆய்வு செய்ததில் அதில் எலும்பு துண்டுகள் இருப்பது தெரியவந்தது. எச்சங்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என கவலை அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், பெட்டியை திறந்து பார்த்தனர். அவர்கள் பார்த்தபோது, ​​உள்ளே ஒன்பது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவனின் தலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பார்சலுக்குள் ஒரு ஸ்பைடர் மேன் […]
n457965332167271931785724869ed003aae93966fed1901a4f395123836b5d24e50d0ae86361c87762eb14

You May Like