டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…! யாரெல்லாம் இதற்கு தகுதி…? மிஸ் பண்ணிடாதீங்க…!

TET 2025

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் டெட் தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். தமிழகத்​தில் கடைசி​யாக, கடந்த 2022-ம் ஆண்​டுக்​கான டெட் தேர்வு 2023 பிப்​ர​வரி​யில் நடத்​தப்​பட்​டது. 2023, 2024-ம் ஆண்​டு​களுக்​கான டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.

2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள் டெட் முதல் தாள் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் 2-ம் தாள் தேர்வுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். நவம்பர் 15, 16-ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை நிறைவடைகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

2025 ஹாக்கி ஆசிய கோப்பை!. சீனாவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்தியா!. தென்கொரியாவுடன் மோதல்!

Sun Sep 7 , 2025
2025 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மென் இன் ப்ளூ அணி 7-0 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்கு […]
India qualify Hockey Asia Cup 2025 final

You May Like