தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது..
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தனது முதல் தேர்தலை சந்திக்க தவெக தயாராகி வருகிறது.. திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது விஜய் தலைமையில் தான் கூட்டணி என்றும், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் அறிவித்து தேர்தலை சந்திக்க உள்ளது தவெக..
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.. இது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் நாளை நடைபெற உள்ளது..
2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதற்காக My Tvk என்ற செயலியை விஜய் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே நாளை முதல் 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்க விஜய் அறிவுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற உள்ள 2வது மாநில மாநாடு குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை விஜய் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் இந்த மாநாட்டை எப்படி நடத்துவது, மாநாட்டு பணிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் நாளை பிரிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இந்த கூட்டத்திற்கு தவெக உறுப்பினர் சேர்க்கை அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் விஜய் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது..
Read More : பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா? ஒரே வரியில் இபிஎஸ் சொன்ன பதில்..