2024 ஆம் ஆண்டில் உலகளவில் ராணுவச் செலவுகள் மிகுந்த அளவில் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக அரசியல் பதற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகார சமநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (IISS) வெளியிட்ட அறிக்கையின்படி, பல பெரிய நாடுகள் தங்களின் நவீன போர் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு நிதியை அதிகரித்துள்ளன.
இது தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்கள், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, மற்றும் புதிய தலைமுறை ஆயுத அமைப்புகள் ஆகியவற்றில் முதலீட்டைச் செலுத்துவதை உள்ளடக்கியது.
அமெரிக்கா
2024 இல், ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ராணுவச் செலவாளராக உள்ளது. IISS அறிக்கையின் படி, அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி USD 968 பில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதுவரை எந்த நாடும் பதிவு செய்யாத அளவாகும்.
அமெரிக்கா தொடர்ந்து அதிகம் செலவிடுவதற்கான காரணங்கள்:
அதன் உலகளாவிய ராணுவ இருப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப திட்டங்கள், அணு ஆயுத திறன், உலகளாவிய படை நியமனம், விலை உயர்ந்த ஆயுத அமைப்புகள், பழைய போர் உபகரணங்களை நவீனப்படுத்தல் ஆகியவையாகும்.
சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா
சீனா, 2024-இல் USD 235 பில்லியன் செலவுடன் இந்த பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.. இது பெரும்பாலும் இந்தோ-பசிபிக் பிராந்திய போட்டி, கடற்படை விரிவாக்கம், ஹைபர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான போர்த் திறன்கள் ஆகியவற்றோடு தொடர்புடையது.
இந்த பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது, USD 145.9 பில்லியன் செலவுடன். இது நீண்டகால ராணுவ இயக்கங்கள் மற்றும் போர் தள தேவைகள் காரணமாகும்.
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து, நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.
ஐரோப்பா தற்போது உலகளாவிய அதிகார மாற்றங்களை கருத்தில் கொண்டு தனது பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் நிலை?
2024 ஆம் ஆண்டில், இந்தியா உலகளவில் ஆறாம் இடத்தில் உள்ளது.
IISS தரவின்படி, இந்தியாவின் ராணுவச் செலவு USD 74.4 பில்லியன் ஆகும்.
இதற்கான முக்கிய காரணங்கள்:
எல்லைப் பாதுகாப்பு முன்னுரிமைகள்,
போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் கடற்படை கப்பல்களின் நவீனப்படுத்தல்,
உபகரண மேம்படுத்தல்,
சைபர் போர்த் திறன் வளர்ச்சி ஆகியவையாகும்.
மேலும், இந்தியாவுக்கு உலகின் மிகப்பெரிய நிலையான படைகளில் ஒன்று இருப்பதால், ஆண்டு தோறும் மீளும் செலவுகள் மிகுந்த அளவில் உள்ளன.
அதேபோல், ‘மெய்க் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் உள்ளூர் ஆயுத உற்பத்தி ஊக்குவிப்பு கூட முக்கிய பங்காற்றுகிறது.
ஏன் நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கின்றன?
உலகளாவிய பாதுகாப்பு சூழல் தற்போது மிகுந்த அமைதியின்மை நிலையிலுள்ளது.
இதற்கு காரணங்கள்:
தைவான் நீரிணை பிராந்தியத்தில் உயர்ந்துவரும் பதற்றம்,
ரஷ்யா-உக்ரைன் போர்,
மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் குழப்பம்.
இவை அனைத்தும் நாடுகளை எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு தயார் செய்ய தூண்டுகின்றன.
இன்றைய நவீன போர், பாரம்பரிய ராணுவத்தை தாண்டி செல்கிறது.. இது
செயற்கைக்கோள்கள், சைபர் பாதுகாப்பு, AI அடிப்படையிலான போர்த் தளங்கள், ஏவுகணை கவசங்கள், ஹைபர்சோனிக் திறன்கள் மற்றும் மின்னணு போர் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மிகுந்த முதலீட்டை தேவைப்படுத்துகிறது. மேலும், நாடுகள் தங்களின் ராணுவ வலிமை சர்வதேச தளத்தில் அரசியல் செல்வாக்கையும் தந்திர வலிமையையும் வழங்கும் என நம்புகின்றன..



