2025-ன் டாப் 10 இந்திய படங்கள்..! தமிழ் படங்கள் என்னென்ன? IMDB லிஸ்ட் இதோ..!

top 10 popular indian movies 2025 imdb list 1 1

2025 கிட்டத்தட்ட முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் 2026 வந்துவிடும். புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகிவிட்டனர். இந்த சூழலில், வழக்கம் போல், இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களின் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது.


திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பகுப்பாய்வு செய்து வழங்கும் தளமான IMDb, சமீபத்தில் மிகவும் பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படமான சாயாரா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் புதுமுகங்களான அனீத் பத்தா மற்றும் அஹான் பாண்டே ஆகியோர் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துள்ளனர். சத்தமே இல்லாமல் வெளியாகி பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய இந்த படம் ரூ.550 கோடி வசூலித்துள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அனிமேஷன் படமான ‘மஹாவதார நரசிம்மா’ இந்தப் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 350 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது..

விக்கி கௌஷல் மற்றும் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படம் சுமார் ரூ.600 கோடி வரை வசூல் செய்தது..

டாப் 10 பிரபலமான படங்கள் பட்டியலில் ரிஷப் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்த் நடித்த ‘காந்தாரா: அத்தியாயம் 1’ நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரூ.850 கோடி வரை வசூல் செய்துள்ளது..

இந்த பட்டியலில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படம் 5-வது இடத்தில் உள்ளது.. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் ரூ.500 கோடி வசூல் செய்தது..

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் 6-வது இடத்தில் உள்ளது. இந்த படம் ரூ.150 கோடி வரை வசூல் செய்தது.. இந்த பட்டியலில் ஆமிர் கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ 7-வது இடத்தில் உள்ளது.. ‘தேவா’, ‘ரைடு 2’ மற்றும் மலையாளத்தின் ‘லோகா’ ஆகியவை முறையே 8, 9, 10வது இடங்களைப் பிடித்துள்ளன.

Read More : உச்ச நடிகர்களுடன் பல பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தவர்.. 50 வயதிலும் சிங்கிளாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?

RUPA

Next Post

உடலின் இந்த பாகங்களில் வலி இருக்கா? உங்கள் சிறுநீரகங்கள் சேதமடைந்துள்ளது என்று அர்த்தம்.!

Thu Dec 11 , 2025
சிறுநீரகங்கள் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகங்கள் உடலில் வடிகட்டிகளாக செயல்படுகின்றன. எந்தவொரு சிறுநீரக பிரச்சனையும் முழு உடலையும் பாதிக்கிறது. சிறுநீரகங்களுக்கு ஏற்படும் சேதம் உடலின் சில பகுதிகளில் வலியை ஏற்படுத்தும். இருப்பினும், உடலின் சில பகுதிகளில் வலியை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இது சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பின் கடுமையான அறிகுறியாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறுநீரக பிரச்சனைகள் உடலின் இந்த பகுதிகளில் […]
kidney health 3 1 1

You May Like