பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்த நடிகர் அர்ஜுன்..? என் குடும்பத்திற்கே அவரை பிடிக்கும்..!!

பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசிய நிலையில், அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் நேரில் சந்தித்து பேசினார். பாஜகவை பலப்படுத்த மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை குறிப்பாக நடிகர்-நடிகைகளை கட்சியில் இணைப்பது தொடர்பாக பாஜக காய் நகர்த்தி வருகிறது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியை அர்ஜுன் சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களுக்கு அரசியல் வட்டாரத்தில் வழிவகுத்தது. இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அர்ஜுன் பேட்டியளித்தார்.

அதில், ’என்னுடைய கோவிலுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். அவ்வளவு தான். சும்மா கேஷுவலாகத்தான் சந்தித்து பேசினேன். இப்போது தான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். ரொம்ப பிடித்தமானவர். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார்” என்றார். அப்போது செய்தியாளர்கள் நடிகர் அர்ஜூன் பாஜகவில் இணைந்துவிட்டார் என்று தகவல்கள் பரவுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க.. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது” என்று பேசினார்.

Chella

Next Post

முள்ளங்கி இலைகளை இனி தூக்கி போடாதீங்க..!! நம்ப முடியாத எக்கச்சக்க நன்மைகள்..!!

Sat Jan 20 , 2024
குளிர்காலத்தில் முள்ளங்கி அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறியாகும். இந்த வேர் காய்கறியை சாலட், சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் சமைத்து சாப்பிடலாம். இதன் இலைகள் பல்வேறு ஆரோக்கிய நலன்களின் களஞ்சியமாக விளங்குகின்றன. நீங்கள் வழக்கமான முறையில் முள்ளங்கி இலைகளை சாப்பிட்டு வந்தால் பல்வேறு விதமான நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். முள்ளங்கி இலைகளில் புரோட்டின், சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், குளோரின், வைட்டமின் A, B மற்றும் […]

You May Like