கமலுக்கு உடல்நலக்குறைவு : இந்த வார பிக்பாஸில் தொகுப்பாளர் இவரா.?!

நடிகர் கமலஹாசன் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அரசியலயும் விட்டு வைக்கவில்லை.

தற்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

கமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முந்தைய சீசன்களில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிம்பு இருவரும் கமலுக்கு பதில் பங்கேற்றனர்.

அதுபோல இந்த வாரம் இவர்களில் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Baskar

Next Post

நாகையை அலறவிட்ட ”No” குறியீடு..!! தீரன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்..!! நடுங்கிப்போன மக்கள்..!!

Sat Nov 26 , 2022
நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடச் சென்ற மர்ம நபர்கள் எதிர்பார்த்து வந்த அளவு பணமோ பொருட்களோ இல்லாததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று வீட்டில் No என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி ஆசாத் நகரைச் சேர்ந்தவர்கள் ஜியாவுதீன், சமீமா. இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு வெளியூர் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாகச் […]
நாகையை அலறவிட்ட ”No” குறியீடு..!! தீரன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்..!! நடுங்கிப்போன மக்கள்..!!

You May Like