கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், அதிகப்படியான செலவினங்களைக் குறைக்க பயனர்கள் பெரும்பாலும் இந்த கார்டுகளை ரத்து செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும், கிரெடிட் கார்டை ரத்து செய்வதற்கு முன், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
உங்கள் கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன், அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்துவது மிகவும் முக்கியம், ஏனெனில் இந்த நிலுவை பேமெண்ட்கள் வட்டி மற்றும் தாமதமான அபராதக் கட்டணங்களை செலுத்த வழிவகுக்கும்.இது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதுகாக்கும். உங்கள் நிலுவைத் தொகையை உங்களால் செலுத்த முடியவில்லை என்றால், உங்கள் வங்கியின் உதவியுடன் பரிமாற்ற செயல்முறையைத் தொடங்குவதன் மூலம் உங்கள் கிரெடிட் பேலன்ஸை புதிய கிரெடிட் கார்டுக்கு மாற்றலாம்.
நீங்கள் ஆட்டோ பேமெண்ட் முறையில் சில பில்கள் அல்லது சந்தாக்களுக்கு கட்டணம் செலுத்தலாம். எனவே கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன், ஆட்டோ பேமெண்ட் முறையை நிறுத்துவது நல்லது. இந்த பேமெண்ட்கள் தானாக நின்றுவிடாது. நீங்கள் நிலுவைத் தொகை இல்லாத சான்றிதழை அல்லது எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறும் வரை, கார்டு சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாது. இதனால் தொடர்ந்து பில் செலுத்த வேண்டி இருக்கும். பணம் செலுத்தத் தவறினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும், மேலும் உரிய தேதிக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் அபராதக் கட்டணங்களும் விதிக்கப்படும். எனவே, எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படாமல் இருக்க, அனைத்து ஆட்டோ பேமெண்ட்டுகளையும் முன்பே ரத்து செய்வது நல்லது.
உங்களிடம் பல அட்டைகள் இருந்தால், முதலில் புதிய அட்டைகளை மூடுவது நல்லது. ஏனெனில் உங்கள் கிரெடிட் கார்டை மூடும் போது, உங்கள் கிரெடிட் கணக்கின் வயது உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், கார்டு வாங்கிய ஆண்டை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, பழைய கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படுத்தும் விளைவுகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் கிரெடிட் கார்டின் உபயோகம், அந்தக் காலகட்டம் முழுவதும் நீங்கள் பொறுப்பான கடனாளியாக இருந்தீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது, இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு பங்களிக்கிறது. உங்கள் கிரெடிட் கார்டை மூடுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும்.. குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்கள் கடனுக்கு அதிக வட்டி விகிதம் இருக்கும். நீங்கள் கல்விக் கடன் அல்லது வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்றால், அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். எனவே நீங்கள் விரைவில் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் கார்டுகளை ரத்து செய்வது நல்லது.
கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளை வழங்குகிறது. அவை கேஷ் பேக், தள்ளுபடிகள், கூப்பன்கள் போன்ற சலுகைகளை வழங்கலாம். எனவே உங்கள் கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன், ஏற்கனவே உள்ள அனைத்து ரிவார்டு புள்ளிகளையும் மீட்டுக்கொள்வதை உறுதிசெய்துவிட்டு, ரத்துசெய்ய விண்ணப்பிக்கவும்.