’நடிகர் விஜய்யை உடனே கைது செய்யுங்கள்’..!! திடீரென டிஜிபி-யை சந்தித்த அரசியல் பிரபலம்..!! பரபரப்பில் சினிமா திரையுலகம்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் ‘நா ரெடி தான்’ பாடல் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது. இப்பாடல் வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

அந்தவகையில், தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருந்தார். அதேபோன்று அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் இந்தப் பாடலினைத் தடை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா போலீஸ் நிலையத்தில் விஜய்யைக் கைது செய்யுமாறு கூறி மனு ஒன்றினை அளித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “டிஜிபியை சந்தித்து நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று ஒரு மனு கொடுத்துவிட்டு வந்திருக்கேன். அதற்கு காரணம் என்னவெனில் ‘நா ரெடி தான் வரவா’ பாடல் “புற்றுநோயை விளைவிக்கும்” என்ற வாசகம் கூட இல்லாது வெளியாகி இருந்தது.

அதுமட்டுமல்லாது இதில் வரும் வரிகள் யாவும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தவறான பாதைக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த வரிகளை நீக்குமாறு கூறியும் நீக்கவில்லை. இதனையடுத்து, நான் ஒரு பேட்டி ஒன்றினையும் அளித்திருந்தேன், அதனைப் பல பேர் பார்த்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் பணம் கொடுத்து பேக் ட்விட்டர் கணக்குகளை திறந்து பயன்படுத்தத் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

Chella

Next Post

மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர் திறப்பு

Thu Jul 6 , 2023
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 188 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை […]

You May Like