மாஸாக என்ட்ரி கொடுத்த “தளபதி” களைகட்டும் வாரிசு ஆடியோ லான்ச்..! வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே உள்ளது. இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கில், ரசிகர்களுடன் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது.

2 வருடங்களுக்குப் பின்னர் விஜய் திரைப்பட விழாவில் பங்கேற்றுக் கொள்ள இருக்கிறார் என்பதால், அவருடைய ரசிகர்கள் அவரை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதோடு, விஜய் அரசியல் பேசுவாரா? என்னவிதமான குட்டி கதை சொல்லப் போகிறார்? என்றெல்லாம் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வாரிசு இசைவெளியீட்டு நிகழ்ச்சி அரங்குக்கு மாஸாக தளபதி விஜய் வந்துள்ளார், ரசிகர்களை பார்த்து கை அசைத்து வணக்கமிட்ட விஜயை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் தெறிக்க விடுகின்றனர் தளபதி ரசிகர்கள்.

https://twitter.com/VCDtweets/status/1606637554757177345

இந்த இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், அனிருத், விஜயின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

அதிகம் கவலைப்படுபவரா நீங்கள்.. மன அழுத்தத்தை குறைக்க இந்த சூப் ஒன்று போதும்..!

Sat Dec 24 , 2022
சுரைக்காய் புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதனால் சுரைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சீமை சுரைக்காய் சாறு, காய்கறி அல்லது சூப் வடிவில் சாப்பிடலாம். சுரைக்காய் சூப் குடிப்பதால், ஆரோக்கியமாக இருக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். கூடுதலாக, சூப் உடல் எடையை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சூப் குடிப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் இங்கே காணலாம். இந்த செய்முறையை […]

You May Like