“ பாகுபலி, RRR லாம் பக்கத்துல கூட வர முடியாது..” பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம்..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி உள்ளது..

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடிக்க உள்ளனர்.. இப்படத்திற்காக ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்..

சூப்பர் அப்டேட்..!! 'பொன்னியின் செல்வன் பாகம் 2' எப்போது ரிலீஸ் தெரியுமா?

படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த லையில் இன்று அதிகாலை பொன்னியின் செல்வன் படம் திரையரங்குகளில் வெளியானது.. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தியேட்டரில் பேனர், கட் அவுட் வைத்து படத்தை கொண்டாடினர்.. இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்..

அதன்படி பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன.. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் வரலாற்று பிரம்மாண்டத்தை பிரமாண்டமாக கொண்டாடவேண்டிய தருணம் இது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.. பாகுபலி, RRR லாம் பக்கத்துல கூட வர முடியாது என்றும் ஒரு சில பதிவிட்டுள்ளனர்..

https://twitter.com/Sachinssenthil/status/1575670376922693633

Maha

Next Post

தேசிய விளையாட்டு விருதுக்கு அக்டோபர் 1-ம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்....!

Fri Sep 30 , 2022
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 […]

You May Like