மனுநிதிநாள்….!பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்….!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இது வரும் பொதுமக்களிடமிருந்து போதிக்கையை மனுக்கள் தரப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 265 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

அதோடு இந்த கூட்டத்தில் கூட்டுறவு நகர வங்கி சார்பாக 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 50000 கடன் உதவியும், 3 பயனாளிகளுக்கு 65 ஆயிரம் மகளீர் சிறு வணிக கடன் உதவிகளும், 2 பயனாளிகளுக்கு 35 ஆயிரம் ஆடவர் சிறு வணிக கடன் உதவிகளும், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கி இருக்கிறார்.

அதோடு திருப்புகுழியைச் சேர்ந்த உஸ்மான் ஷெரீப் என்ற நபர் காதொலி கருவி கேட்டு மனு வழங்கியதை தொடர்ந்து அதன் மீது உடனடியான நடவடிக்கை மேற்கொண்டு அவருக்கு மாவட்ட ஆட்சியர் காதொலி கருவியை வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவியாளர் ஆர்பிட் ஜெயின், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாபு, தனி துணை ஆட்சியர் ஆர்.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

Next Post

அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கம்…..! நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்க அரசு…..!

Wed Jun 7 , 2023
இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து 216 பயணிகள், 16 விமான பணியாளர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானி விமானத்தை ரஷ்யாவில் உள்ள மகதான் விமான நிலையத்திற்கு திருப்பி விட்டதாக டாடா குழுமத்திற்கு சொந்தமான தனியார் கேரியர் நேற்று மாலை ஒரு அறிக்கையில் […]
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்..!! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்..!! அதிரடி உத்தரவு

You May Like