கொரோனா அட்டாக்..!! இன்னைக்கு ரொம்ப கவனமா இருங்க..!! மாஸ்க் முக்கியம்..!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால், தொற்று பரவல் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

‘ஜேஎன் 1’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. இந்தியாவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில்ம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது.

அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால், நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8% குறைந்துள்ளது. ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.

Chella

Next Post

உங்களுக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறதா..? அப்படினா இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Dec 25 , 2023
அரசு அல்லது தனியார் ஊழியர்கள் யாராக இருந்தாலும் பணி செய்யும்போது அவர்களது வருமானத்தில் இருந்து பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். ஊழியர்கள் தங்கள் பிஎஃப் தொகையை பணியின்போதோ அல்லது ஓய்வுபெற்ற பிறகு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பணியின்போது ஊழியர்கள் பிஎஃப் தொகையை எடுக்க விரும்பினால், அதற்கு சில விதிமுறைகள் உண்டு. அதன்படி, கல்வி, மருத்துவம், திருமணம், நிலம் வாங்குவது, வீட்டுக் கடன், வீடு சீரமைப்பு […]

You May Like