மாடு வளர்ப்பவர்கள் கவனமா இருங்க..!! இன்னும் தடுப்பூசி வரலையாம்..!! மத்திய அரசு தான் காரணமாம்..!!

பருவமழை, வெயில் காலங்களில் மாடுகள், கன்றுகளை கானை நோய் என்னும் கோமாரி நோய் கடந்த காலத்தில் அதிகளவு தாக்கியது. இந்த நோயை கவனிக்காமலும், சிகிச்சை அளிக்காமலும் விட்டால் மாடுகளின் உயிருக்கே ஆபத்தை மாறிவிடும். இந்நோயால் மாடுகள் உயிரிழப்பு குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, மாடுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதனால், ஆண்டுதோறும் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் மாடுகளுக்கும், 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது அக்டோபர் கடைசியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட வேண்டிய கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கால்நடை துறையினர் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டாக இந்த நோயைத் தடுக்க மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் நோய் வருவதைத் தடுக்க போலி தடுப்பூசி எப்படி போடப்படுகிறதோ அதுபோல், கோமாரி நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தடுப்பூசியை மாநில அரசு மாடுகளுக்கு போட்டு வந்தது. கடந்த 2021 முதல் மத்திய அரசு தமிழகத்திற்கான தடுப்பூசிகளை வழங்கி வந்தது. செப்டம்பர் மாதம் போடுவதற்கான தடுப்பூசி தற்போது வரை எந்த மாவட்டத்திற்கும் அனுப்பவில்லை’’ என்றனர்.

Chella

Next Post

சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களை நீக்க வேண்டும்...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Sat Oct 7 , 2023
சமூக வலைத்தளத்தில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் புகைப்படங்களை நீக்க X, யூடியூப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் தொடர்பாக இந்த சமூக ஊடக தளங்கள் விரைவாக பதிலளிக்கவில்லை என்றால், ஐடி சட்டத்தின் 79 வது பிரிவின் கீழ் அவற்றின் பாதுகாப்பை ரத்து செய்யலாம் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். அதே போல ஆட்சேபனைக்குரிய […]

You May Like