Daniel Balaji | மறைந்த பிறகும் பிறர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய டேனியல் பாலாஜி..!!

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் இன்று தானமாக பெறப்படுகிறது. தானத்தின் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவரின் கண்கள் பார்வையில்லாதவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உயிருடன் இருக்கும்போதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்த அவர், மறைந்த பிறகும் தனது கண்களை தானமாக கொடுத்து, பிறரின் வாழ்க்கையில் ஒளிவீச செய்துள்ளார்.

Read More : Lok Sabha Election | கருத்துக் கணிப்பு முடிவுகள்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

ஜெயிலுக்கு சென்ற போப் பிரான்சிஸ்!… பெண் கைதிகளின் கால்களை முத்தமிட்டு சடங்கு!… ஏன் தெரியுமா?

Sat Mar 30 , 2024
போப் பிரான்சிஸ் ஜெயிலுக்கு நேரில் சென்று பெண் கைதிகளின் காலை முத்தமிட்டு புனித சடங்கை நிகழ்த்தினார். ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் […]

You May Like