ஓடாத படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு நயன்தாரா மீது கேஸ் போட்ட ராம பக்தர்கள்..!! அப்செட் ஆன அன்னபூரணி..!!

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணாவின் அறிமுக படமான அன்னபூரணி படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் வெளியான போது புயல் வெள்ளம் காரணமாக மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஓடிடியில் இந்த படம் வெளியான நிலையில், தற்போது நயன்தாரா மீதும் படத்தின் மீதும் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வரும் என அறிவித்த நிலையில், அது கடைசி வரைக்கும் வரவே இல்லை. அதற்கு பதிலாக நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கி வெளியிட்டது. இப்படத்தில் ஐயர் வீட்டுப் பெண்ணு அசைவம் சமைப்பவராகவும், இஸ்லாமியரை காதலித்து கிளைமேக்ஸ் காட்சியில் ’பிரியாணி நல்லா செய்யணும்னா தொழுகை பண்ணாத்தான் நல்லா வரும்’ என தொழுகை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். ஹீரோவாக இஸ்லாமியர் ஜெய்யை வைத்த நிலையில், இந்த படம் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும், அதே நேரத்தில் ராமரை அசைவ பிரியர் என எப்படி சொல்லலாம் என்கிற கேள்விகளையும் எழுப்பியது. இதனால், இந்து அமைப்பினர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பாக இதை வைத்து புரமோஷன் செய்திருந்தால் கூட படம் ஓரளவுக்கு வசூல் ஈட்டியிருக்கும். நயன்தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் உட்பட ரூ.12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெறும் ரூ.80 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாகவும், மேலும் இப்படம் படுதோல்வியை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படியொரு ஏழரை வேறு வந்திருக்கிறது.

Chella

Next Post

செக்...! பொங்கல் பரிசுத் தொகுப்பு வேண்டுமா...? ரூ.1,000 பெற பயோமெட்ரிக் முறை கட்டாயம்...!

Mon Jan 8 , 2024
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கு தமிழகம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு தொகுப்பு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை […]

You May Like