தோசை ஊத்த மாவு இல்லையா? இனி தோசை செய்ய மாவு தேவையில்லை..

பொதுவாக இட்லி, தோசைக்கு மாவு அரைத்தால் எப்போது காலியாகும் என யாருக்கும் தெரியாது. தோசை சற்று முறுகலாக இருந்தால் 2 தோசை சாப்பிடுபவர்கள் கூட 4 அல்லது 5 சாப்பிடுவார்கள். இப்படி தோசை மாவை வைத்து இந்த பொழுதை கடத்தி விடலாம் என்று இல்லத்தரசிகள் நினைக்க வேறொன்று நடந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் தோசை மாவு இல்லாமல் இனி தோசை செய்து விடலாம். எப்படி தெரியுமா?? வாருங்கள் பார்ப்போம்..

ஒரு மிக்ஸி ஜாரில், ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். பின்னர், அதில் உப்பு, மிளகு, சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து, அதில் ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறிதளவு மிக்சி ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவி இந்த மாவுடன் சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். 20 நிமிடம் கழித்து அந்த மாவை நன்றாக கலந்து விட்டால் போதும், உங்கள் தோசை மாவு ரெடி..

இப்போது, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, நன்றாக கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் இந்த மாவை ஊற்ற வேண்டும். உங்களுக்கு வேண்டும் என்றால், அதன் மேல் கேரட் அல்லது பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளை தூவி விடலாம். ஒரு புறம் வெந்ததும் அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான தோசை தயார்..

Maha

Next Post

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவு...!

Mon Oct 2 , 2023
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023-க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு NMMS தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை […]

You May Like